பிக்பாஸ் சீசன் 3 வீட்டில் போட்டியாளராக நுழையும் திருநங்கை - ரசிகர்கள் ஷாக் - அதிரடி அப்டேட்


தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் கடந்த மாதம் முதல் துவங்கி ஒளிபரப்பாகி வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா விஜயகுமார் ஆகிய 3 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 

இந்தவாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் சேரன், சரவணன், சாக்‌ஷி அகர்வால், கவின், மீரா மிதுன், அபிராமி உள்ளிட்ட 6 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் இயக்குநர் சேரன் காப்பாற்றப்பட்டுவிட்டதாக நேற்று கமல்ஹாசன் அறிவித்தார்.


இந்நிலையில், இன்று நடிகை மீரா மிதுன் வெளியேற்றப்பட்டு சீக்ரெட் ரூமில் அடைக்கப்ட்டு மீண்டும் ஒரு வாரம் கழித்து பிக்பாஸ் வீட்டுக்குள் திரும்ப அனுப்பப்படுவார் என்று கிட்டத்தட்ட உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன. 


இந்நிலையில், 17-வது போட்டியாளராக நடிகை ஆல்யா மானசா செல்லவுள்ளார் என்ற உறுதியான தகவல் நம்பத்தகுந்த வட்டரங்களிடம் இருந்து கிடைத்துள்ளன. மேலும், தமிழ் பிக்பாஸ் போலவே தெலுங்கிலும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த வாரம் தொடங்கியது. 

இதில், இப்போது திருநங்கை ஒருவர் வைல்ட் கார்டு முறையில் உள்ளே நுழையவுள்ளர். இவர் பெயர் தமன்னா சிம்ஹட்ரி. பவர் ஸ்டார் பவன் கல்யாணின் தீவிர ரசிகையாம். அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் தமன்னா மங்களகிரி தொகுதியில் போட்டியிட்டார். பிக்பாஸில் இவர் கலந்துகொள்ள சிபாரிசு செய்தது சீசன் 2 போட்டியாளர் நுதன் நாயுடு என்ற நடிகர் தானாம்.