40 வயதாகியும் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை - சீரியல் நடிகை ஸ்ருதி வெளியிட்ட அதிர்ச்சி காரணம்..!


பிரபல சீரியல் நடிகை ஸ்ருதி பிரபல தொலைகாட்சி ஒன்றில் தென்றல் சீரியல் மூலமாக அறிமுகமானார். அதுமட்டுமல்லாமல் அந்த சீரியலில் துளசி கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் ஒரு சில படங்களிலும், சீரியல்களிலும் நடித்துள்ளார். 

அதன் பிறகு "அன்னக்கொடியம் ஐந்து பெண்களும்", "அபூர்வ ராகங்கள் " போன்ற சீரியலில் நடித்தார். தற்போது சன் டிவியில் அழகு சீரியலில் சுதா கேரக்டரில் நடித்து வருகிறார். இதன் மூலம் பல லட்ச ரசிகர்களை கவர்ந்துவிட்டார் என்றே கூறலாம். 


தற்போது நாற்பது வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இதனால், இவரது நண்பர்கள் நெருங்கியவர்கள் என பலரும் ஏன் திருமணம் செய்யவில்லை என்று தொடர்ந்து கேட்டார்களாம். 

இந்நிலையிக்,மீபத்தில் ஒரு பேட்டியில் ஸ்ருதி கூறியதாவது "எனக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால், திருமணம் நடக்காமல் பாதியிலேயே நின்று விட்டது. இதனால், மிகவும் மனவேதனையடைந்தேன்.

இனி திருமணம் செய்துகொள்ளவேண்டாம் என முடிவு செய்தேன். ஆனால், இப்போது, என் மனநிலை மாறியுள்ளது. திருமணத்திற்கு தற்போது தயாராக இருக்கிறேன். கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்வேன் என கூறியுள்ளார்.