அகில உலக சூப்பர் ஸ்டாரின் அடுத்த அவதாரம்..! - புகைப்படம் உள்ளே


சுமோ இயக்குனர் எஸ் பி ஹோசிமின் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா, பிரியா ஆனந்த் நடிக்கும் நகைச்சுவை திரைப்படம். 

இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் இஷரி கே கணேஷ் தனது வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்ன இசையமைத்துள்ளார். 


இந்தியா மற்றும் ஜப்பான் நாட்டில் நகைச்சுவை படமாக்கப்படும் இத்திரைப்படத்தில் வி டி வி கணேஷ், யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ஜப்பான் நாட்டில் உள்ள சுமோ வீரர் யோஷிநோரி தாஷிரோ ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


காமெடி கதையாக கலந்து சீரியஸ் விசயங்களை புகுத்தி படங்களில் தொடர்ந்து நடித்து வரும் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா தனக்கு அண்மையில் குழந்தை பிறந்துள்ளதை மகிழ்ச்சியாக டிவிட்டர் மூலமாக கூறினார். 

இந்நிலையில், இவர் நடித்துக்கொண்டிருக்கும் சுமோ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இதில் குங்-பூ மாஸ்டர் அவதாரம் எடுத்திருக்கிறார் நம்ம சிவா. 

இதோ அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 

Suma Tamil Movie
SUMO TAMIL MOVIE