நீருக்கடியில் சண்டை போட்டா சிம்ரன் மற்றும் திரிஷா..!


ஜோடி படத்தில் ஒன்றாக நடித்த சிம்ரன் - த்ரிஷா பல ஆண்டுகளுக்கு பிறகு பேட்ட படத்தில் நடித்தனர். தற்போது மீண்டும் இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர். 


ஆக்ஷன் கதையில் உருவாகி வரும் இந்த படத்தை, சுமந்த் ராதா கிருஷ்ணன் இயக்கி வருகிறார். இந்த படத்திற்காக சிம்ரனும், த்ரிஷாவும் தண்ணீருக்கு அடியில் சண்டையிடும் காட்சியில் நடித்துள்ளனர். 


இந்த காட்சியில் நடிப்பதற்காக அவர்களுக்கு முறையாக பயிற்சி கொடுத்து படமாக்கியிருக்கிறார்கள். படத்தில் இந்தக்காட்சி ஹைலைட்டாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில், இப்படத்திற்கு "சுகர்" என தலைப்பு வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.