ஜானுவாக மாறிய லாஸ்லியா குறித்து நடிகை திரிஷா என்ன சொல்லி இருக்கார் பாருங்க..!


திரிஷா சினிமாவுக்கு வந்து 17 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தமிழ், தெலுங்கில் நம்பர் 1 நடிகையாக வலம் வந்த திரிஷா, பல புதுமுகங்களின் வரவால் அவருடைய மார்க்கெட் டல்லடித்தது. 

அதனால் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிடலாம் என நினைத்தவருக்கு அதுவும் வொர்க்கவுட் ஆகவில்லை. பிறகு தெலுங்கு நடிகர் ராணாவுக்கும் திரிஷாவுக்கும் இடையில் காதல் என தென்னிந்தியாவில் கிசுகிக்க அவர்களோ நாங்கள் இருவரும் நண்பர்கள் என்று சொல்லி எஸ்கேஎப் ஆகினர்.


தற்போது, ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் நடித்து வரும் திரிஷா சமீபத்தில் நடித்த "96" திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. விண்ணைதாண்டி வருவாயா ஜெஸ்சி-க்கு பிறகு "96" ஜானு தான் என்று ரசிகர்கள் பாராட்டுகளை பெற்றார். 


இந்நிலையில், நேற்று நடந்த பிக்பாஸ் போட்டியில், பெண் போட்டியாளர் லாஸ்லியா-விற்கு ஜானு கதாபாத்திரம் கொடுக்கபட்டு திருப்பாச்சி பட பாடலான கட்டு கட்டு கீர கட்டு என்ற பாடலுக்கு நடனம் ஆட சொல்லப்பட்டார். 

இதனை பார்த்த நடிகை திரிஷா " பிக்பாஸ்-ல் எதிர்பாராத விதமாக ஜானு. நிச்சயம் இந்த எபிசோடை பார்க்க வேண்டும்" என கூறியுள்ளார்.