நான் அவன் இல்லை பட நடிகை ஜோதிர்மயி என்ன ஆனார்..? - இப்போது அவரின் நிலை என்ன..? - இதோ புகைப்படம்


தமிழில் தலைநகரம் படத்தின் மூலம் அறிமுகமான மலையாள நடிகை ஜோதிர்மயி. அதன் பிறகு நான் அவனில்லை. வெடிகுண்டு முருகேசன், பெரியார், சபரி, இதய திருடன், அறை எண் 305ல் கடவுள் ஆகிய படங்களில் நடித்தார். 

அதன் பிறகு சரியான வாய்ப்புகள் இல்லாததால் மலையாள சினிமாவுக்கே திரும்பி விட்டார். ஜோதிர்மயி 2004ம் ஆண்டு எர்ணாகுளத்தைச் சேர்ந்த நிஷாந்த் குமார் என்ற கம்ப்யூட்டர் என்ஜினியரை திருமணம் செய்து கொண்டார். 

திருமணத்துக்கு பிறகும் ஜோதிர்மயி சினிமாவில் தொடர்ந்து நடித்தது தொடர்பாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். பின்னர் முறைப்படி 2011ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். 


திருமணம் ஆனவர் என்பதால் தொடர்ந்து ஜோதிர்மயிக்கு எந்த சினிமா வாய்ப்பும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஜோதிர்மயி பிரபல மலையாள இயக்குனர் அமல் நீரத்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். 


இந்த திருமணம் இயக்குனர் நீரத்தின் வீட்டில் எளிய முறையில் நடந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நீரத் மம்முட்டி நடித்த பிக் பி, மோகன்லால் நடித்த சாகர் அலையாஸ் ஜாக்கி, பிருத்விராஜ் நடித்த அன்வர் உள்ளபட பத்துக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர். 

அதன் பிறகு முழுமையாக சினிமாவுக்கு முழுக்கு போட்ட நடிகை ஜோதிர்மயி இப்போது தான், தன் குடும்பம் என மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.