பார்ட்டியில் இளம் நடிகைகள் மீது பீர்-ஐ ஊற்றி ஆட்டூழியம் செய்த இயக்குனர்..! - வைரலாகும் வீடியோ


தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குனராக உள்ளவர் ராம் கோபால் வர்மா. பிரபல இயக்குனர் என்பதை விட சர்ச்சை இயக்குனர் எனலாம். 

ஏனென்றால் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையான ஒன்று. 

அப்படிதான் டோலிவுட்டில் இந்த வாரம் வெளியான ராம் போத்தினேனியின் ஐஸ்மார்ட் ஷங்கர் படத்தின் சக்ஸஸ் பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார். மது போதையில் அங்கிருந்த பெரும்பாலானோர் தள்ளாடியப்படி இருந்தனர். 

இந்நிலையில், இயக்குனர் ராம் கோபால் வர்மா பார்ட்டிக்கு வந்திருந்த இளம் நடிகைகள் சார்மி, நாபா நடேஷ், நித்தி அகர்வால் மற்றும் அவர்களது தோழிகளின் மீது பீர்-ஐ ஊற்றுகிறார். அவரே வெளியிட்டுள்ள இந்த வீடியோ சர்ச்சையாகியுள்ளது.