பிக்பாஸ் சீசன் 3 வீட்டில் உள்ள 16 போட்டியாளர்களில் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படுபவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லொஸ்லியா.
நடிகை ஓவியாவிற்கு பிறகு இவருக்கு தான் ஆக்டிவான ஆர்மி உள்ளது. எந்த பிரச்சனையும் செய்யாமல், அந்த கேங் இந்த கேங் என்று இல்லாமல் அனைவருடனும் எதார்த்தமாக பழகிவருகிறார்.
அதே சமயம், இரண்டு வாரங்கள் மட்டுமே கடந்துள்ளது. இவருடைய சுயரூபம் என்ன என்பது வரும் நாட்களில் தான் தெரியும் எனவும் பிக்பாஸ் சீசன் 2-வில் புள்ளை பூச்சியாக இருந்த ஐஸ்வர்யா தத்தா ஐந்து வாரங்களுக்கு பிறகு ஆளே மாறிப்போனார். அது போல தான் லொஸ்லியாவும் என ஒரு தரப்பு ரசிகர்கள் கூறுகிறார்கள்.
போதாக்குறைக்கு, இவர் தனது 19 வயதிலேயே திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றவர் என்ற வதந்தி வேறு பரவி வருகின்றது. இந்நிலையில், நேற்றை-யை பிக்பாஸ் எபிசோடில் இரண்டு ஆண் போட்டியாளர்களுடன் பாட்டு பாடி நடனம் ஆடி மகிழ்ந்தார். அதுவும் தண்ணீரே இல்லாத நீச்சல் குளத்தில்.
லொஸ்லியா எதை செய்தாலும் அதனை வைரலாக்கும் அவரது ஆர்மியினர் இந்த வீடியோவையும் வைரலாக்கி வருகிறார்கள்.


