நாதஸ் திருந்திட்டான் பா..! அவனே சொன்னான்..! என்பதற்கு ஏற்பார் போல திடீரென டக் டக் என இரண்டு படங்களில் எந்த பிரச்சனையயுமின்றி நடித்து முடித்தார் விரல் நடிகர்.
யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை மீண்டும் தன்னுடைய வேலையை காட்ட தொடங்கியுள்ளார். அவர் இரண்டு படங்களில் நடித்து முடித்ததற்கு காரணமே அவருக்கு இருந்த பண பிரச்சனை தான் எனவும் இப்போது பணம் வந்துவிட்ட காரணத்தால் மீண்டும் தன்னுடைய வேலையை காட்டுகிறார் எனவும் கூறுகிறார்கள்.
தற்போது, 2017-ம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த கன்னட படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோவாக நடித்து வரும் அவர் படப்பிடிப்புக்கு இரவு நேரத்தில் தான் வருவேன். ஞாயிற்று கிழமை விடுமுறை என பல விதிமுறைகளை போட்டுவந்துள்ளார். அதனை பொறுத்துக்கொண்ட தயாரிப்பு நிறுவனம் அவர் செய்த இன்னொரு செயலை தாங்க முடியாமல் டோஸ் விட்டுள்ளது.
தயாரிப்பாளரின் கணக்கில் ஸ்டார் ஓட்டலில் தங்கும் நடிகர் தான் மட்டுமின்றி தனது நண்பர்களையும் சேர்த்து கொண்டு போய் ஓட்டலில் தங்க வைத்து தயாரிப்பாளரின் கணக்கில் ஏற்றியுள்ளார்.
என் படத்துல நீங்க நடிக்குறீங்க.? உங்களுக்கு செலவு பண்றதுல ஒரு நியாயம் இருக்கு..! உங்களோட நண்பர்களுக்கு நாங்க ஏன் சார் செலவு செய்யவேண்டும் என்று கேட்டது தான் குறை. படத்தை அப்படியே விட்டுவிட்டு வெளிநாடு பறந்து விட்டார் நடிகர்.
இதெல்லாம் எங்க போய் முடியப்போகுதோ என தெரியாமல். நடிகரின் பெற்றோரிடம் முறையிட்டுள்ளது தயாரிப்பு குழு. என்ன நடக்கப்போகின்றது என்பதை பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும்.


