பிக்பாஸ் லாஸ்லியா-வை மோசமாக விமர்சித்த நடிகை சுஜா வருணி..! - ரசிகர்கள் ஷாக்..! - என்ன இப்படி சொல்லிட்டாங்க..!


தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. பதினாறு போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், வனிதா, மோகன் வைத்யா, பாத்திமா பாபு ஆகியோர் வெளியேற்றப்பட்டு விட்டனர். 

ஆனால், துவக்கம் முதல் எல்லோரையும் கவர்ந்து வருகிறவர் லாஸ்லியா. அவர் செய்யும் சிறுசிறு விஷயங்களை ரசித்துக் கொண்டிருந்த ரசிகர்கள் கூட்டம், இப்போது, லாஸ்லியா மீது அதிருப்தி அடைந்திருப்பதாகக் கூறபப்டுகிறது. 


கேம் விளையாடுவதற்காக அவர் இரட்டை வேடம் போடுவதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், லாஸ்லியாவின் செயல்பாடுகள் குறித்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே கலந்து கொண்ட சுஜா வருணியிடம், ரசிகர் ஒருவர் சமூக வலைதளம் மூலம் கேள்வி எழுப்பி இருந்தார். 


அதற்கு பதில் அளித்திருக்கும் சுஜா வருணி, லாஸ்லியாவின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்திருக்கிறார். சுஜா வருணியின் பதிவில் கூறியிருப்பதாவது : பிக்பாஸ் வீட்டில் Safe Game 
விளையாடுவது லாஸ்லியாதான். 

Philosophy எல்லாம் பேசுகிறார். ஆனால், வில்லேஜ் டாஸ்கில் கவினுடன் ஜாலியாக பேசிக் கொண்டிருக்கிறார். அவரது இரட்டை முகம் ஏற்கனவே வெளிப்பட்டு விட்டது. இவ்வாறு அவர் கூறியிருக்கிறார். இது லாஸ்லியா ரசிகர்கள் மத்தியில் கடும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.