மகளின் செயலால் நிம்மதி இழந்து சினிமா வாழ்க்கையையே இழந்த இயக்குனர் சேரன்! இவ்வளவு சோக கதையா..?


பிரபல இயக்குனர் சேரன் பிக்பாஸ் சீசன் 3 வீட்டில் போட்டியாளராக தொடர்ந்து 4 வாரங்களாக இருந்து வருகிறார். இந்நிலையில், நடிகை மீரா மிதுன் நேற்று சேரன் இமேஜை டேமேஜ் செய்யும் அளவுக்கு பாலியல் சீண்டல் ரீதியிலான புகார் ஒன்றை கூறியிருந்தார். 

இதனால் , மனுஷன் அழுதே விட்டார். இது ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில், என்னுடைய மகள்கள் வாழ்கை இதனால் பாதிக்கப்படும் என கதறி அழுதார். இயக்குனர் சேரன் மகள் தாமினி, சினிமா டான்சர் சந்துருவை காதலித்தார். 


ஆனால், மகளின் காதலை ஏற்க மறுத்தார் சேரன். இதனால் சந்துருவின் வீட்டுக்கு தாமினி சென்றுவிட்டார்.பின்னர் இந்த விஷயம் வெளி உலகுக்கு தெரிய வந்தது. சந்துருவின் நடவடிக்கைகள் சரியல்ல என்பதால் மகளின் காதலை மறுப்பதாக சேரன் அறிவித்தார். ஆனால், சந்துருவுடன்தான் வாழ்வேன் என்று தாமினி பிடிவாதமாக இருக்கிறார்.


இந்த காதல் விவகாரம் போலீஸ் வரை சென்றதால், தாமினியை அரசு இல்லத்தில் போலீசார் தங்க வைத்தனர். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சந்துருவின் தாயார் ஈஸ்வரி அம்மாள் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த போது சேரன் மகள் தாமினியை, நீதிபதிகள் மேடைக்கு அழைத்து பேசினர். 

சந்துருவுடன் செல்வதில் அவர் உறுதியாக இருந்தார்.இறுதியில், தாமினி மேஜர் என்பதால் அவர் விருப்பம் தான் என உத்தரவு பிறப்பிக்கபட்டதை தொடர்ந்து தாமினி அவர் காதலித்த நடன இயக்குனர் சந்த்ருவையே திருமணம் செய்து கொண்டார். இதனால் மனமுடைந்த இயக்குனர் சேரன் அதிலிருந்து மீளவே பல வருடங்கள் ஆகியுள்ளது. 

இதனால் தான் அவரால் முன்பு கொடுக்கப்பட்ட ஆட்டோகிராப், பொக்கிஷம் போன்ற தரமான படங்களை தற்போது கொடுக்க முடியவில்லையாம். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திருமணம் படமும் அவ்வளவாக ஒடவில்லை. 

இதையெல்லாம் மறக்கவும் மீண்டும் புத்துயிர் பெறவும் தான் அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளாராம். இதையே அவரது நண்பர் இயக்குனர் சமுத்திரகனி ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.