Posts

Showing posts with the label Director Cheran

பெண்களுக்கு மட்டும் இலவச பேருந்து பயணம் - சமூக வலைதளங்களில் எழும் கோரிக்கை..!

Image
தமிழகத்தில் பேருந்துகளில் மகளிர் இலவசமாகப் பயணிக்கலாம் என முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்த திட்டம் இன்றே அமலுக்கு வந்துள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அறுதி பெரும்பான்மை பெற்ற திமுக ஆட்சி அமைத்துள்ளது.    இன்று தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் பதவி ஏற்றார். அவருடன் அமைச்சர்களும் ஆளுநர் மாளிகையில் நடந்த எளிய விழாவில் பதவி ஏற்றனர். இன்று மு க ஸ்டாலின் தனது முதல் திட்டங்களாக அறிவித்ததில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டமும் ஒன்றாகும்.    அதன்படி தமிழக அரசின் அனைத்து சாதாரண பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்ய முடியும். இந்த திட்டம் இன்றே அமல் படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள மகளிர் மிகவும் மகிழ்ச்சியுடன் இன்று முதல் தங்கள் இலவச பேருந்து பயணத்தைத் தொடங்கி உள்ளனர்.   இந்நிலையில், பிரபல பத்திரிகையாளர் இந்துஜா ரகுநாதன் அவர்கள் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். அதில், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்பதை வரவேற்கிறேன்.    இந்த சலுகையை திருநங்கைகளும் பயன்பெரும் வண்ணம் நீட்டிக்க வேண்டும். பெண்களுட...

"ஆஹா,,, சிக்கிட்டமா.. சரி என்ஜாய் பண்ணுவோம்.." - பங்கமாய் கலாய்க்கும் ரசிகர்கள்..! - இயக்குனர் சேரன் பதில்..!

Image
  தமிழ் சினிமா சினிமாவின் மறக்கமுடியாத இயக்குனர் “சேரன்” என்றே சொல்லலாம். இவர் இயக்கிய முதல் படத்தில் தனது முத்திரையை ஆழமாகப் பதித்து விட்டார்.    பாரதிராஜா வைப்போல் கிராமத்துப் பின்னணியில் படத்தை இயக்கும் ஆர்வம் கொண்ட இவர், கேஎஸ் ரவிக்குமார் அவர்களின் உதவி இயக்குனராக பணியாற்றினார். மூன்றுமுறை தேசிய விருதுகளை பெற்ற இயக்குனர் என்ற பெருமையையுடன் வளம் வரும் இயக்குனர் சேரன்.   சேரன், மதுரையில் உள்ள பழையூர்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தார். இவரின் தந்தை “பாண்டியன்” அங்கு உள்ள திரையரங்குகளில் ப்ரொஜெக்டர் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார்.    இதனாலேயே இவருக்கு சினிமா மேல் ஆர்வம் அதிகரித்தது. இவரின் தாய் பெயர் “கமலா”. இவர்களைப் பிரிந்து சென்னைக்கு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு வந்துள்ளார்.    உதவி இயக்குனராக சேரன்   ஆரம்பத்தில் கிடைத்த வேலைகளை செய்து வந்த இவர் “புரியாத புதிர்” படத்தில் உதவி இயக்குனராகவும், “சேரன் பாண்டியன்” “நாட்டாமை” போன்ற படத்தில் அசோசியேட் இயக்குனராக பணியாற்றினார்.   இயக்குனர் சேரன் கடைசியாக இயக்கிய படம் ‘ஜே.கே. எனு...

ஆட்டோகிராஃப் 2 - இயக்குனர் சேரன் கொடுத்த அதிரடி பதில்..!

Image
தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் சேரன். சமீப காலமாக தனது மகளின் காதல் பிரச்சனை காரணமாக மனமுடைந்து போனார். தொடர்ந்து ஒரு சிறு சறுக்கல்.  ஆனால், சமீபத்தில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குநர் சேரன், 91 நாட்கள் தாக்கு பிடித்து பிறகு வெளியேறினார். அதையடுத்து தனது டுவிட்டரில், ‛‛தலைவணங்கி நிற்கிறேன்.  91 நாட்களாக எனது பிக்பாஸ் பணத்தை சரியாக புரிந்து கொண்டு என்னை தாலாட்டி தட்டிக் கொடுத்து என் அன்பின் பக்கம் நின்ற அனைத்து நல்ல இதயங்களுக்கும் நன்றி.  நேர்மை, நற்பண்பு, உண்மையின் பக்கம் நிற்கும் நீங்களே தலைசிறந்த மனிதர்கள். மீண்டும் என்னை உங்களில் ஒருவரான ஏற்றதில் மகிழ்ச்சி'' என பதிவிட்டிருந்தார்.  சேரனின் இந்த பதிவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. சேரன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியபோது, பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த அனுபவமே உங்களுக்கு இன்னொரு ஆட்டோகிராப்பிற்கான கதையை கொடுத்திருக்கும் என்று நினைக்கிறேன்.  அதனால், இந்த அனுபவத்தை வைத்து ஆட்டோகிராப் 2 படத்திற்கான கதையை ரெடி பண்ணுங்கள் என்றார் கமல். அதற்கு...

பிக்பாஸ் சேரனின் பள்ளிப்பருவ புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா..? - இதோ புகைப்படம்

Image
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோக்களில் தற்போது ட்ரெண்டிங் ஆக உள்ள நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 3தான். இப்போட்டியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.  அதில் ஒருவர் நம் தமிழ் திரையுலகின் சிறந்த இயக்குனர் சேரன். இவரின் அனைத்து படைப்புகளும் மிகவும் சிறந்த படங்கள். தமிழ் திரையுலகில் தரமான இயக்குனர் என பெயர் பெற்றவர்.  சில படங்கள் சரியான வசூலை பெறாத காரணத்தால் நஷ்டம் அடைந்ததால் கடனாளி ஆகிவிட்டார். அந்த சூழ்நிலையில் தான் அவருக்கு இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு கொள்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த போட்டியின் அனைத்து விதிமுறைகளையும் ஒத்துக்கொண்டு கையெழுத்திட்ட பின்பு தான் அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். இவர் பிக்பாஸ் வீட்டுக்கு சென்றது தவறு என அமீர் உட்பட சில இயக்குனர்கள் கூறி வருகிறார்கள். ஆனால், சேரன் என்ன செய்ய வேண்டும் , என்ன செய்ய கூடாது என்பதை முடிவு எடுக்க அவருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்று கூறியுள்ளார் இயக்குனர் பேரரசு.  இந்நிலையில், சேரனின் இளவயது புகைப்படம் மற்றும் அவரது தாயாரின் புகைப்படம்...

அஜித் இடது கையில் தான் டீ, காபி குடிப்பார் - சேரன் சொன்ன விஷயம் - அதன் பின் இருக்கும் குட்டி லாஜிக் இது தான்..!

Image
இன்றைய பிக்பாஸ் எபிசோடில் சரவணன், சேரன் சண்டை பிராதான இடம் பெற்றது. இதனிடையே நடிகர் கவின் அஜித் போல சில விஷயங்களை செய்யவில்லை.  நான் கவினிடம் கூறினேன் அஜித் எப்போதுமே வலது கையில் டீ,காபி சாப்பிட மாட்டார். இடது கையை தான் பயன்படுத்துவார் என்று ஆனாலும் கவின் அதை திருத்தி கொள்ளவில்லை என்று கூறினார். அது சரி, அஜித் எதுக்கு இடது கையில் டீ, காபி குடிக்கிறார் என பலருக்கும் தோன்றும் ஒரு கேள்வி. அதற்கு பின்னால் ஒரு குட்டியான லாஜிக் இருக்கு பாஸ்.  ஆம், பொதுவாக இடது கை பழக்கம் உள்ளவர்கள் உட்பட 98% பேர் வலது கையில் தான் டீ,காபியை குடிப்பார்கள். ஒருவர் வலது கையில் கோப்பையை எடுத்து அருந்தும் போது ஒரு பக்கம் எச்சில் படும். ஆனால், இடது கையில் எடுத்து குடித்தால் மறு பக்கம் எச்சில் படும்.  என்னதான் கோப்பையை சுடு தண்ணீரில் கழுவி விடுகிறார்கள் என்றாலும் 98% சதவிதம் பேர் கோப்பையை வலது கையில் எடுத்து ஒரு பக்கம் அதிகப்படியான எச்சில் செய்துள்ளனர். ஆனால், இடது கையில் வெறும் 2% பேர் தான் குடிக்கிரார்கள். இதனால் தான் அஜித் காப், டீ அருந்தும் போது இடது கையை பயன்படுத்துகிறா...

சேரன் எதுக்கு பிக்பாஸ் வீட்டுக்கு போகணும் - விளாசிய பிரபல நடிகர்..!

Image
பிரபல இயக்குனர் சேரன் பிக்பாஸ் வீட்டில் இருப்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். ஆனால், இவர் ஏன் இந்த வீட்டிற்குள் சென்றார் என்பது தான் தற்போது பல பிரபலங்களின் கேள்வியாக உள்ளது.  அதுவும் மக்கள் கடந்த சில நாட்களாக சேரன் பிக்பாஸ் வீட்டில் படும் அவமானங்களை பார்த்து நொந்து தான் போகின்றனர். இந்நிலையில் சேரன் குறித்து பிரபல நடிகர் மனோபாலா தனது கருத்தை பதிவு செய்துள்ளார். பிக்பாஸ் வீட்டில் சேரன் இருப்பது குறித்து ஒரு பேட்டியில்\ எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் " மொதல்ல, சேரன் எதற்கு அந்த வீட்டிற்கு போவனும்.  சேரன் எவ்வளவு பெரிய டைரக்டரு. அவர் அங்கு சென்றிருக்கவே கூடாது. என்னை கூட தான் 3 முறை கூப்பிட்டார்கள், நான் போகவில்லையே’ என கூறீயுள்ளார்.

மகளின் செயலால் நிம்மதி இழந்து சினிமா வாழ்க்கையையே இழந்த இயக்குனர் சேரன்! இவ்வளவு சோக கதையா..?

Image
பிரபல இயக்குனர் சேரன் பிக்பாஸ் சீசன் 3 வீட்டில் போட்டியாளராக தொடர்ந்து 4 வாரங்களாக இருந்து வருகிறார். இந்நிலையில், நடிகை மீரா மிதுன் நேற்று சேரன் இமேஜை டேமேஜ் செய்யும் அளவுக்கு பாலியல் சீண்டல் ரீதியிலான புகார் ஒன்றை கூறியிருந்தார்.  இதனால் , மனுஷன் அழுதே விட்டார். இது ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில், என்னுடைய மகள்கள் வாழ்கை இதனால் பாதிக்கப்படும் என கதறி அழுதார். இயக்குனர் சேரன் மகள் தாமினி, சினிமா டான்சர் சந்துருவை காதலித்தார்.  ஆனால், மகளின் காதலை ஏற்க மறுத்தார் சேரன். இதனால் சந்துருவின் வீட்டுக்கு தாமினி சென்றுவிட்டார்.பின்னர் இந்த விஷயம் வெளி உலகுக்கு தெரிய வந்தது. சந்துருவின் நடவடிக்கைகள் சரியல்ல என்பதால் மகளின் காதலை மறுப்பதாக சேரன் அறிவித்தார். ஆனால், சந்துருவுடன்தான் வாழ்வேன் என்று தாமினி பிடிவாதமாக இருக்கிறார். இந்த காதல் விவகாரம் போலீஸ் வரை சென்றதால், தாமினியை அரசு இல்லத்தில் போலீசார் தங்க வைத்தனர். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சந்துருவின் தாயார் ஈஸ்வரி அம்மாள் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசார...

ஆட்டோகிராஃப் 2 வருமா..? - ரசிகரின் கேள்விக்கு ஒரே வார்த்தையில் பதிலளித்த இயக்குனர் சேரன்..!

Image
சேரன் இயக்கி, தயாரித்து, நாயகனாக நடித்த படம் ஆட்டோகிராப். 2004-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் கோபிகா, சினேகா உள்ளிட்ட பலர் சேரனுடன் நடித்தனர். தேசிய விருது, தமிழக அரசு விருது மற்றும் பல்வேறு திரைப்பட விழாக்களில் விருது என பல விருதுகளைக் குவித்த படம் ஆட்டோகிராப். சேரனின் திரையுலக வாழ்க்கையில் அவருக்கு உலகளாவிய பெருமையைத் தேடிக் கொடுத்த படம் என்று கூட சொல்லலாம்.  இதற்கு பிறகு ஆட்டோகிராப்-2 படத்திற்கும் திட்டமிட்டார். ஆனால் அச்சமயத்தில் அப்படம் கைவிடப்பட்டது. திருமணம் படத்துக்குப் பிறகு தனது அடுத்த படத்தின் இயக்கம் குறித்து கதை விவாதத்தில் ஈடுபட்டு வரும் சேரன், தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களால் எழுப்பப்படும் கேள்விகளுக்கும் பதிலளித்து வருகிறார். அந்தவகையில் ஆட்டோகிராப் 2 வாய்ப்பு இருக்கிறதா சார்? என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு கண்டிப்பாக வரும் என்று பதிலளித்துள்ளார் சேரன்.