உலகக்கோப்பை கிரிக்கெட் தட்டுதடுமாறி ஒருவழியாக முடிவுக்கு வந்து எப்போதும் இல்லாத அளவுக்கு சர்ச்சையான இறுதிபோட்டியை சந்தித்து இன்று வரை அது பிரச்சனை, இது பிரச்சனை. இங்கிலாந்து ஜெயித்த அணியல்ல, நியூசிலாந்து தோற்ற அணியல்ல என பல புலம்பல்கள் இருந்துகொண்டு தான் இருகின்றன. இது இன்னமும் தொடரும் என்றே கூறலாம். அந்த லட்சணத்தில் தான் நடந்தது உலகக்கோப்பை இறுதி போட்டி.
இந்நிலையில், இந்த போட்டிக்கு பிறகு வெளியான சிறந்த பேட்ஸ்மேன்கள் தரவரிசைப்பட்டியலில் ஆறு புள்ளிகள் வித்தியாசத்தில் ரோஹித் ஷர்மாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்துக்கு முன்னேறினார் விராட் கோலி.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மூன்று T20, மூன்று ODI, மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளை விளையாடவுள்ளது இந்திய அணி. இந்த அணியில், கேப்டன் விராட் கோலி விளையாடப்போவதில்லை. அதனால், அவர் வகித்து வந்த கேப்டன் பதவி ரோஹித் ஷர்மா-வுக்கு செல்கின்றது.
இந்த போட்டிக்கான அணி தேர்வு ஜூலை 17-ம் தேதியான நேற்றிலிருந்து நடந்து வருகின்றது. ஜூலை 18, அதாவது இன்று மாலை இறுதியான இந்திய அணி முடிவு செய்யப்பட்டு நாளை மதியம் அறிவிப்பு வெளியாகவுள்ளது. விராட் கோலி மற்றும் தோனி ஆகியோர் அணியில் இடம் பெறபோவதில்லை என்பது கிட்டதட்ட உறுதியான தகவல்.
தற்போது, வெறும் ஆறு புள்ளிகள் மட்டுமே பின் தங்கியுள்ள ரோஷித் ஷர்மா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அந்த புள்ளிகளை பெற்று மீண்டும் முதலிடத்துக்கு வந்து விடுவார் என்று தெரிகின்றது.



