தமிழ் சினிமாவின் காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானம். பல படங்கள் இவரது நகைச்சுவைக்காகவே ஓடி ஹிட் அடித்துள்ளன. சந்தானம் காமெடி பண்ற படமா..? நம்பி போலாம் பா என்பது பொதுவான ரசிகர்களின் கருத்து.
ஆனால், இனிமேல் நோ காமெடி ஒன்லி ஹீரோ என கூறி ஹீரோவாக நடிக்க சென்று விட்டார். முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி ரோல் செய்வதற்கு அழைப்பு வந்தும் அதனை மறுத்து விட்டார் சாண்டா.
காரணம், தன் காமெடியால் பலரையும் சிரிக்க வைத்து வருடத்திற்கு 20 படங்களுக்கு மேல் தலை காட்டி வந்த இவர் தற்போது ஹீரோ என்று வருடத்திற்கு ஒரு படம் ரிலிஸ் செய்வது எல்லோருக்கும் கொஞ்சம் வருத்தம்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் தன் உடல் எடையை வெகுவாக குறைக்க, அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. ஏனெனில் இது சந்தானம் தானா உண்மையாகவே, இவருக்கு என்ன ஆனது? என்று கேட்க வைக்கின்றது.



