நடிகை சனா கான், தன்னுடைய கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டு வருகிறார். நடிகை சனாகான், தமிழில் ‘சிலம்பாட்டம்’, ‘தம்பிக்கு இந்த ஊரு’, ‘பயணம்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
கோலிவுட்டில் வாய்ப்புகள் இல்லாததால் பாலிவுட்டிற்கு சென்றார். அங்கும் எதிர்பார்த்த அளவு இல்லை. இந்நிலையில் நடிகர் சல்மான் கானின் நட்பு கிடைத்து. அவருடன் நெருங்கி பழகி வந்தார். அந்த நெருக்கத்தின் காரணமாக சல்மான்கான் தான் நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் சனா கானுக்கு வாய்ப்பு கொடுத்தார்.
மேலும் தனது படத்திலும் வாய்ப்பு தந்தார். ஆனாலும் சனாவுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வரவில்லை. இதற்கிடையில் தனது தம்பியுடன் சேர்ந்து இளம் பெண்ணை கடத்தியதாக சனா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் சில காலம் தலைமறைவாக இருந்தார்.
சமீபத்தில் கவர்ச்சியான போட்டோ செஷன் நடத்தி அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணைய தளத்தில் தவழ விட்டதுடன் இயக்குனர்களுக்கும் தனிப்பட்ட முறையில் அனுப்பி வாய்ப்பு தேடி வருகிறார் சனாகான்.
அந்த வகையில், நீச்சல் உடையில் தங்க நகை அணிந்து கொண்டிருக்கும் வித்தியாசமான கவர்ச்சி போஸ் கொடுத்திருகிறார் சனாகான். இந்திய பெண்களுக்கு தங்க நகைகள் மீது உள்ள ஆர்வத்தை பிரதிபலிக்கும் வகையில் இப்படி நீச்சல் உடையிலும் தங்க நகை அணிந்துள்ளார் சனாகான்.



