நடிகர் சூரி சினிமாவில் சின்னச் சின்ன ரோல்களில் நடித்து தற்போது முழு நேர காமெடி நடிகராக மாறிவிட்டார். அதுவும் முன்னணி காமெடி நடிகர்களான வடிவேல் மற்றும் விவேக் ஆகியோர்களின் லிஸ்டில் இணைந்துவிட்டார்.
அது போல் காமெடியில் வடிவேலுக்கு பாடி லாங்குவேஜ், சந்தானத்திற்கு மற்றவர்களை கலாய்ப்பது அந்த வகையில் நடிகர் சூரிக்கு ஆங்கிலத்தை தவறாக பேசுவது இதுதான் இவரின் ஸ்டைல்.
நடிகர் சூரி சினிமாவில் வருவதற்கு முன்பு சன் டிவி சீரியலில் திருமதி செல்வம் என்ற சீரியலில் நடித்துள்ளார் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த புகைப்படம் தற்போது கிடைத்துள்ளது. மேலும் நடிகர் சூரி தற்போது பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார்.
சீமராஜா படத்தில் சிக்ஸ் பேக் வைத்து நடித்திருந்த இவர், தற்போது, ஹீரோவாக நடிக்கவுள்ளார். படத்தின் இயக்குனர் வேறு யாருமில்லை, வெற்றிமாறன் தான்.
தற்போது தனுஷ் நடித்து வரும் அசுரன் படத்தை இயக்கி வரும் வெற்றி மாறன். இந்த படம் முடிந்ததும் நடிகர் சூரியை ஹீரோவாக வைத்து படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தை RS Infotainment எல்ரெட் குமார் தயாரிக்கவுள்ளார்.


