காவலன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை மித்ரா குரியன் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..!


ஆக்ஷன் ஹீரோவாக கலக்கி வந்த நடிகர் விஜய் சற்றே அந்த பாணியில் இருந்து விலகி முழுக்க முழுக்க காதலை மையமாக கொண்ட படத்தில் சாதுவாக நடித்த படம் தான் காவலன். 

இந்த படத்தில், சண்டை காட்சிகள் வேண்டுமே என்ற ஒரே காரணத்திற்க்காக மட்டுமே சில அக்ஷன் காட்சிகள் இருந்ததே தவிர மற்றபடி முழுக்க முழுக்க காமெடி கலந்து காதல் திரைபடம் தான் காவலன். இதில், வித்தியாசமான கதாபாத்திரத்தில் விஜயின் ஆரம்ப கால காதல் படம் போல நடித்திருப்பார். 


இந்த திரைப்படம் வட மொழி திரைப்படமான பாடி காட் திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டது. இந்த படத்தில் அசினுக்கு ஜோடியாக நடித்தவரை ஞாபகம் இருக்கிறதா. அவருடைய பெயர் மித்ரா குரியன் 1989 இல் கேரளாவில் பிறந்த இவர் தனது திரைப்பயணத்தை ஒரு துணை நடிகையாக ஆரம்பித்தார். 


லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாராவின் நெருங்கிய சொந்தக்காரறான இவர் முதன் முதலில் 2004 இல் மலையாளத்தில் அவருடன் விஷவயாதும்பது என்ற படத்தில் துணை நடிகையாக நடித்தார். அதனையடுத்து,தமிழில் 2008 வெளியான சாது மிரண்டால் என்ற படத்தில் பிரசன்னாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.


அதன் பிறகு சூரியன் சட்டக்கல்லூரி,காவலன்,கந்தா, புத்தனின் சிரிப்பு போன்ற படங்களில் நடித்திருக்கிறார். தற்போது 30 வயது ஆகும் இவர் சரியான பட வாய்ப்புகள் இல்லாததால் இப்பொழுது சினிமாவை விட்டு சற்று தள்ளியே இருந்தார். கடந்த ஆண்டு வெளியான,ஆந்திரா மெஸ் என்ற படத்தில் நடித்திருந்த இவர். தற்போது, நந்தனம் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.