பிக்பாஸ் 3வது சீசனில் காதலர்கள் என்று கவின்-சாக்ஷியை கூறினோம்.
அவர்களும் இருக்கு, இல்லை என மாற்றி மாற்றி பேசி பார்வையாளர்களையும்
குழப்பி வந்தார்கள். ஆனால், இருவருக்குள்ளும் எதோ ஒன்று நடந்திருகின்றது. ஆனால், பிக்பாஸ் குழு அதனை மறைக்கிறது.
அடிக்கடி,கவின் நான் உன்னிடம் நட்பாகத்தான் பழகினேன் என கூறும் போதெல்லாம் அப்புறம் எதுக்கு அப்படி பண்ண..? என்று ஷாக்சி சொல்லிக்கொண்டே இருப்பார்.
அப்படி என்ன நடந்தது என பிக்பாஸ் காட்டவே இல்லை. அனேகமாக, மருத்துவமுத்தம் போல எதையாவது அல்லது அதையும் தாண்டி எதையாவது செய்திருப்பாரா என்பதை உங்களுடைய யூகத்துக்கே விட்டு விடுகிறோம்.
இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக மீரா மிதுனை வைத்து காலம் கடத்தி வந்த பிக்பாஸ் இப்போது மீண்டும் கவின் ஷாக்சி காதல் விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. இப்போது காலை வந்த புரொமோ இரண்டிலும் கவின், சாக்ஷி, லாஸ்லியா மூவரை சுற்றியே இருந்தது. இப்போது வந்த புதிய புரொமோவில் பிரேக் அப் ஆகிவிட்டது என்று சாக்ஷி தேம்பி தேம்பி காதல் தோல்வியில் அழுகிறார்.
ஷெரின் மற்றும் ரேஷ்மா இருவரும் இதோடு நாளை முதல் புதிய நாள் என்று தொடங்கும் வேறு மாதிரி இரு என்று அறிவுரை கூறுகிறார்கள். இதனை பார்த்த ரசிகர்கள் எத்தனை நாள் தான் இந்த காதல் புராணத்தையே ஓட்டிகிட்டு இருப்பபீங்க..! யப்பா..! சாமி..! கதைய மாத்துங்கப்பா..! என்ற ரேஞ்சுக்கு கடியாகி விட்டார்கள்.


