தென் இந்திய அழகிப் போட்டியில் அழகியாக தேர்வு செய்யப்பட்டவர் மீரா மிதுன். இவர் அழகிப் போட்டி நடத்துவதாகக் கூறி, பலரிடமும் பணம் பெற்றார். சொன்னபடி அதை செய்யவில்லை என்றதும், பணம் கொடுத்தவர்கள் அவர் மீது போலீசில் புகார் கொடுத்தனர்.
இது தொடர்பாக வழக்கு பதியப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், அழகி மீரா மிதும், பிக்பாஸ் சீசன் 3ல், போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு, மூன்று வாரங்கள் தாக்குப் பிடித்தார்.
தற்போது, அவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்.இந்நிலையில், எல்லோருக்கும் நன்றி தெரிவித்து அவர், டுவிட்டர் மூலம் பதிவிட்டிருக்கிறார்.
அதற்காக, தன்னுடைய படு கவர்ச்சியான புகைப்படத்தை சேர்த்து வெளியிட்டிருக்கிறார். இந்த பதிவுக்காக, வலைத் தளப் பதிவர்களிடம் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறார் மீரா மிதுன்.
Tags
meera mithun