தோனி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய தகவல் - என்ன இப்படி ஆகிடுச்சு..??


இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. பல ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பையை வென்று கொடுத்தார். மேலும், T20 உலகக்கோப்பையையும் வாங்கி கொடுத்திருகிறார்.

ஆனால், இவரது ஒய்வு எப்போது என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களாலும், பலதரப்பட்ட ரசிகர்களாலும் கேள்வி எழுப்பட்டு வருகின்றது.தோனி-யின் ரசிகர்களோ, அவர் இல்லாத ஒரு இந்திய அணியை ஏற்றுகொள்ள தயாராக இல்லை. இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை T20 போட்டியில் தோனி இடம் பெறுவாரா.? என்றால் கிட்டதட்ட இல்லை என்று தான் கூறுகிறார்கள் BCCI வட்டாரங்கள்.


தற்போது, 38 வயதாகும் தோனி  2019 உலக கோப்பை போட்டியோடு ஓய்வு பெறுவார் என்று அனைவராலும் எதிர் பார்க்கப்பட்டது. இந்நிலையில், உலகக் கோப்பை போட்டியில் அவரது ஆட்டம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது.

மேலும், தோனி தனது ஓய்வு குறித்து தன்னிடம் எதுவும் பேசவில்லை என்று  அணியின் கேப்டன் விராட்கோலி தெரிவித்து இருந்தார். இதன் மூலம் அவர் தனது ஓய்வு முடிவை தள்ளி வைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால், இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாகசொதப்பி வருகிறார்கள். இதனை நிச்சயம் கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லையென்றால், இந்திய அணி அடுத்தடுத்த போட்டிகளில் நிச்சயம் தடுமாறும் என கூறுகிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள். இதன் காரணமாக, தோனியை அணியில் இருந்து நீக்குவது என முடிவில் உள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம். 

தோனி தானாக முன்வந்து ஒய்வு குறித்து அறிவிக்காத பட்சத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் எம்.கே.பிரசாத் ஒய்வு பெருவது தொடர்பாக தோனியிடம் பேசுவார். அப்போது, அவரிடம் தானாக முன் வந்து ஓய்வு பெறுமாறு வலியுறுத்தப்படும் என்று தெரிகிறது. இது தோனி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.