பிரபல இயக்குனர் சேரன் பிக்பாஸ் வீட்டில் இருப்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். ஆனால், இவர் ஏன் இந்த வீட்டிற்குள் சென்றார் என்பது தான் தற்போது பல பிரபலங்களின் கேள்வியாக உள்ளது.
அதுவும் மக்கள் கடந்த சில நாட்களாக சேரன் பிக்பாஸ் வீட்டில் படும் அவமானங்களை பார்த்து நொந்து தான் போகின்றனர். இந்நிலையில் சேரன் குறித்து பிரபல நடிகர் மனோபாலா தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் சேரன் இருப்பது குறித்து ஒரு பேட்டியில்\ எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் " மொதல்ல, சேரன் எதற்கு அந்த வீட்டிற்கு போவனும்.
சேரன் எவ்வளவு பெரிய டைரக்டரு. அவர் அங்கு சென்றிருக்கவே கூடாது. என்னை கூட தான் 3 முறை கூப்பிட்டார்கள், நான் போகவில்லையே’ என கூறீயுள்ளார்.


