நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேறமாதிரி படத்தில் அறிமுகமானவர் அழகுதேவதை சுரபி. அதன் பிறகு வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்தார்.
அழகும், திறமையும் இருந்தாலும் வாய்ப்புகள் ஏனோ சுரபிக்கு வரவில்லை. சிறிய இடைவெளிக்கு பிறகு புகழ் என்ற படத்தில் ஜெய் ஜோடியாக நடித்தார்.
அந்தப் படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை.
அதன் பிறகு தெலுங்கு சினிமாவிற்கு சென்று சற்று கவர்ச்சியை காட்டி தனக்கான இடத்தை பிடித்து விட்டார். அட்டாக், ஜென்டில்மேன், உள்பட பல படங்களில் நடித்தார். இப்போது மீண்டும் தமிழுக்கு திரும்பி இருக்கிறார்.
அடங்காதே என்ற படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்து வரும் சுரபி. தெலுங்கு, தமிழில் தயாராகி உள்ள குறள் 388 என்ற படத்திலும் நடித்துள்ளார். இதில் விஷ்ணு மஞ்சு ஹீரோ. ஜி.எஸ்.கார்த்தி இயக்கி உள்ளார். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
தெலுங்கில் வோட்டர் என்ற தலைப்பில் வெளியாகும் குறள் 388, திருவள்ளுவர் எழுதிய குறளில் 388-வது குறளின் கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இந்த படத்தின் ஒருபாடலில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சி காட்டி நடித்துள்ளார் அம்மணி.
அந்த புகைப்படங்கள் இதோ,
Tags
Actress Surabhi