நியூசிலாந்து-தான் வெற்றி பெற்ற அணி - ICC-யை "F" வார்த்தை கொண்டு தாக்கிய பிரபல நடிகர்..!


நேற்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட்-ஐ பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று தான் சொல்லவேண்டும். அந்த, போட்டியின் இறுதி மேட்ச்சில் இரு அணிகளின் ரன்களும் சமநிலையில் இருந்ததால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. 

அதிலும் ரன்கள் சமன் ஆனதால் போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்த இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது என அறிவிக்கப்பட்டது. இது பற்றி இமைக்கா நொடிகள் பட புகழ் நடிகர் மற்றும் இயக்குனர் அனுராக் காஷ்யப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பவுண்டரியை மட்டும் கணக்கில் எடுத்து கொள்ளும் விதிகள் உள்ளது, ஆனால், இங்கிலாந்தை விடவும் குறைந்த விக்கெட்டுகள் இழந்தது நியூசிலாந்து தான். 

பந்துவீச்சை ஏதோ கீழ்ஜாதி போல கண்டுகொள்ளாமல் விட்டிருக்கின்றனர். நியூசிலாந்து தான் வெற்றி பெற்ற அணியாக அறிவித்திருக்க வேண்டும்" என மிகவும் கோபத்துடன் பதிவிட்டுள்ளார்.