ஒட்டுமொத்த கிரிக்கெட் அணிக்கே தடை விதித்த ICC - ஒரு காலத்துல எப்படி இருந்த அணி..!


உலக கிரிக்கெட்டை முறைப்படுத்தும் அமைப்பான ICC, ஜிம்பாப்வே அணிக்கு கால வரையற்ற தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதற்க்கான காரணத்தை தான் நாம் இப்போது பார்கபோகிறோம். 


ஜிம்பாப்வே அணி ஒரு காலத்தில் பல திறமை மிக்க கிரிக்கெட் வீரர்களை உருவாக்கி தந்த அணி. ஆனால், ஜிம்பாப்வே அணியில் இருக்கும் அரசியல் தலையீடு காரணமாக அந்த அணி திக்கு திசை மாறி நிலை குழைந்து போனது. 


இந்த பிரச்னைகளை உன்னிப்பாக கவனித்து வந்த ICC விளையாட்டில் அரசியல் தலையீட்டை நாங்கள் ஒரு போதும் அனுமதிப்பது கிடையாது. அதனால், ஜிம்பாப்வே அணியை தடை செய்கிறோம் என்று ஒரே போடாக போட்டுள்ளது. 

மேலும், ICC சார்பாக வழங்கப்பட்டு வந்த நிதியும் இனி ஜிம்பாப்வே அரசுக்கு வழங்கப்பட மாட்டாது என்றும்,ஐசிசி நடத்தும் எந்த விதமான போட்டியிலும் ஜிம்பாப்வே அணியால் கலந்து கொள்ள முடியாது என்றும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஜிம்பாப்வே அணியின் மீதான தடை தற்காலிகமானது தான். ஆனால், எப்போது தடை நீக்கப்படும் என்பது குறித்த விபரங்களை ICC இன்னும் வெளியிடவில்லை. You May Like