SIIMA 2019 - விருதுகள் அறிவிக்கப்பட்டது - சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இயக்குனர் யார்..? - இதோ விபரம்


பொதுவாக ஒரு துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு உற்சாகமூட்டக்கூடிய விஷயமாக இருப்பது அவருக்கான பாராட்டுகளும், அங்கீகாரமும் தான். .

அந்த வகையில், சினிமா துறையில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், காமெடியன்கள் ஆகியோர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை பல்வேறு பெயர்களில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

இதனடிப்படையில், கடந்த 7 ஆண்டுகளாக தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது எனப்படும் சைமா விருதுகள் சினிமாவில் சிறந்து விளங்கியவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 


இந்த ஆண்டிற்கான 8ஆவது சைமா விருது வழங்கும் விழா வரும் ஆகஸ்ட் மாதம் 15 மற்றும் 16ம் தேதிகளில் கத்தாரில் உள்ள தோஹாவில் நடைபெற இருக்கிறது.


இதற்கு முன்பாக, குறும்படங்கள் எடுப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் SIIMA SHORT FILMS AWARDS எனப்படும் விருது வழங்கும் நிகழ்ச்சி வருடா வருடம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த 2019-ம் ஆண்டிற்க்கான குறும்பட விருதுகளை தட்டி சென்றவர்கள் யார்..? யார்..? என்ற விபரங்களை இங்கே பார்க்கலாம்..!

சிறந்த இயக்குனர் (தமிழ்) :

அப்பு - ஆ அவனா

சிறந்த நடிகர் (தமிழ்) :

ஆதித் - ஆ அவனா