இன்றைய காலகட்டத்தில் இளசுகளிடம் அதிகமாக வரவேற்பை பெற்றது. பன்ஜீ ஜம்பிங். அதாங்க, குஷி படத்துல நம்ம தளபதி காலில் கயிறை கட்டிக்கொண்டு தலைகீழாக குதித்து சாகசம் செய்வாரே, அது தான் இப்போது பல உயரமான இடங்களிலும் செயல்பட்டு வருகின்றது.
பாதுகாப்பு
சோதனைகள் பல கட்டங்களில் நடைபெற்ற பிறகே அப்படியான பன்ஜி ஜம்பிங்
நடந்ததும் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கபடுகின்றது. ஆனால், ராட்சத கிரேனின்
உதவியுடன் எந்த வித முறையான பாதுகாப்பு பரிசோதனையும் செய்யப்படாத ஒரு
இடத்தில் ஜம்ப் செய்கிறேன் என்று முதுகெலும்பை உடைத்துக்கொண்டிருக்கிறார்
ஒரு நபர்.
போலந்த் நாட்டில் 39 வயதான நபர் ஒருவர் 330 அடி உயரத்தில் இருந்து ஜம்ப் செய்தார். ஆனால், இறுதியில் கயிறு அறுந்ததால் தவறி கீழே இருந்த காற்று நிரப்பிய பாதுகாப்பு விரிப்பின் மீது விழுந்தார்.
உயிருக்கு எந்த வித ஆபத்தும் இல்லை. ஆனால், இனி அவரால் தலைக்கு கீழே எந்த உடல் உறுப்பையும் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,


