VJ ரம்யாவின் இரண்டாவது கணவர் இவரு தான்..! - ரசிகர்கள் கிண்டல்..!


விஜய் டி.வி.யில் தொகுப்பாளினியாக இருந்தவர் ரம்யா சுப்பிரமணியம். ஒரு கட்டத்தில், சின்னத் திரையில் இருந்து அவர், வெள்ளித் திரைக்கு மாறினார். ஓகே கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன், ஆடை உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து வருகிறார். 


கடந்த 2014ல், அவர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமண வாழ்க்கை சில காலங்களிலேயே கசந்து விட, இருவரும் விவகாரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதன் பின்பே, ரம்யா, வெள்ளித் திரையில் கவனம் செலுத்தி வருகிறார். 


இந்நிலையில், அவருக்கு 33வது பிறந்த நாள் வர, அன்றைய தினத்தை அவர் மிகவும் சிறப்பாக கொண்டாடினார். அவருக்கு பலரும் வாழ்த்துத் தெரிவித்தனர். அப்போது, அவர் பிரமிக்கும் வகையில், அவரது ஜிம் பயிற்சியாளர் ஒரு பரிசு அளித்தார். 


அந்தப் பரிசு - செயற்கையான எலும்புக் கூடு. இது குறித்து பெருமையாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் ரம்யா, 'என்னுடைய புது Boy Friend' என கூறியிருக்கிறார்.இதனை பார்த்த ரசிகர்கள், ஆமா அவரையே இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளுங்கள். வாழ்நாள் முழுதும் உங்களுக்கு இந்த கணவனால் எந்த பிரச்னையும் வராது என நகைச்சுவையாக கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.
Previous Post Next Post