மாடலும், நடிகையுமான மீரா மிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய பெயரை ஏகத்துக்கும் டேமேஜ் செய்து கொண்டார். இவர் மீதிருந்த பண மோசடி புகார்கள் ஒரு பக்கம் இருந்தாலும். பிக்பாஸ் வீட்டில் இவர் தனிமைபடுதப்படுகிறார் என்பதால் ரசிகர்களின் கரிசனையை பெற்றார்.
ஆனால், அதற்கும் ஆப்பு வைத்துக்கொண்டு வெளியேறிவிட்டார் மீரா. சேரன் ஒரு டாஸ்கின் போது மீராவின் இடுப்பு பகுதியில் எதேர்ச்சையாக கை வைத்து தள்ளி விட்டு வந்தார். அப்போது, சிரித்துக்கொண்டு வந்த மீரா மிதுன். திடீரென, இடுப்பை பபுடிச்சு தூக்கி போட்டுடாரு என ஒரு குண்டை தூக்கி போட்டார்.
ஏறக்குறைய ஒரு பாலியல் சீண்டல் ரேஞ்சுக்கு அந்த விஷயத்தை ஊதி பெரிது படுத்திவிட்டார் மீரா. இதனால், ரசிகர்கள் செம்ம கடுப்பகினார்கள். அந்த வாரமே அவரை வீட்டை விட்டு துரத்தியும் விட்டார்கள்.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த போட்டியாளராக கலந்து கொள்ளவிருக்கும் நடிகை கஸ்தூரியை சந்தித்து ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டு திரும்பியுள்ளார் மீரா. இந்த புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கஸ்தூரி "ராமேஸ்வரம் போனாலும் இந்த பிக்பாஸ் என்னை விடாது போல இருக்கே என்று கூறியுள்ளார்.
Look who i met today!! ராமேஸ்வரம் போனாலும்... இந்த #biggboss விடாது போலருக்கே! #MeeraMitun pic.twitter.com/4aqm2sTdCQ— Kasturi Shankar (@KasthuriShankar) August 2, 2019


