தன்னை விட 20 வயது அதிகமான நடிகருடன் ரொமான்ஸ் செய்யவுள்ள நடிகை ரெஜினா..!


தமிழ் சினிமாவில் 2005 இல் வெளியான கண்ட நாள் முதல் என்ற படத்தில் துணை நடிகையாக நடித்து அறிமுகமானவர் நடிகை ரெஜினா காசென்ரா. 

அதனை தொடர்ந்து அவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர்.


அதனை தொடர்ந்து சரவணன் இருக்க பயமேன், Mr.சந்திரமௌலி, சமீத்தில் வெளியான சிலுக்குவார்பட்டி சிங்கம் வரை 15க்கும் மேற்பட்ட தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார்.


சமீபத்தில் வெளியான் மிஸ்டர்.சந்திரமௌலி மற்றும் "7" ஆகிய இரண்டு படங்களும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஆனாலும், கை வசம் அரை டஜன் படங்கள் வைத்துள்ளார் அம்மணி. 

இந்நிலையில், அச்சமின்றி, என்னமோ நடக்குது என இரண்டு படங்களை இயக்கிய ராஜபாண்டி இயக்கம் படத்தில் தன்னை விட 20 வயது அதிகமான நடிகர் அரவிந்த்சாமியுடன் ரொமான்ஸ் செய்யவுள்ளார் ரெஜினா.
Previous Post Next Post