தெலுங்கு சினிமாவில் இடையில் சில காலம் காணாமல் போயிருந்த நடிகர் நாகர்ஜுனா இப்போது மீண்டும் ஹீரோவாக தனது அடுத்த ரவுண்டை தொடங்கியுள்ளார். மேலும், தெலுங்கு பிக்பாஸ் சீசன் 3-ஐயும் தொகுத்து வழங்கி வருகிறார்.
இவர் தற்போது ராகுல் இயக்கத்தில் மன்மதுடு-2 என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியா ரகுல் ப்ரீத் சிங் நடிக்க நாசர்,லக்ஷ்மி,தேவதர்ஷினி,அக்ஷரா கவுடா என பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மன்மதுடு-2 படத்தில் கீர்த்தி சுரேஷ், சமந்தா ஆகியோர் கௌரவ தோற்றத்தில் நடிச்சிருக்காங்க. சைத்தன் பரத்வாஜ் இசையில் உருவாகி இருக்கும் இந்த மன்மதுடு-2 படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் சிங்கள் டிராக் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்நிலையில், இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை வெடிக்க செய்துள்ளது. இதற்கு அந்த மாதிரி படங்களின் போஸ்டரே எவ்வளோ மேல் கன்றாவி.. கன்றாவி..! என்று சொல்லும் அளவுக்கு ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.
இதோ அந்த போஸ்டர்,
Tags
Rakul Preeth Singh