வெறும் 3 நிமிடத்திற்கு 10 கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த ஷில்பா ஷெட்டி..! - என்ன காரணம்..?


தமிழில் பிரபு தேவாவுடன் ‘மிஸ்டர் ரோமியோ’ படத்தில் நடித்தவர் ஷில்பா ஷெட்டி. சில வருடங்கள் இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தார். 

தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக 2007-ல் வெளியான அப்னே என்ற இந்தி படத்தில் தர்மேந்திரா, சன்னிதியோல், பாபி தியோல் ஆகியோருடன் நடித்து இருந்தார். அதன்பிறகு படங்களில் நடிக்காமல் சினிமாவை விட்டு ஒதுங்கினார். 


ஷில்பா ஷெட்டியும் தொழில் அதிபர் ராஜ் குந்த்ராவும் 2009-ல் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. பிரபல நடிகைகள் பலரும் சினிமா மட்டுமின்றி விளம்பர படங்களில் நடித்தும் கல்லா கட்டி வருகின்றனர். 


அந்த வகையில், ஷில்பா ஷெட்டியும் பல விளம்பரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், பிரபல நிறுவனம் ஒன்று தாங்கள் தயாரித்துள்ள உடல் எடை குறைக்கும் மாத்திரைகள் மற்றும் பவுடர் குறித்த மூன்று நிமிட விளம்பரத்தில் நடிக்குமாறு அணுகியுள்ளது. மேலும், இதற்காக 10 கோடி ரூபாய் சம்பளமாக தருவதாகவும் கூறியுள்ளது. 

ஆனால், நடிகை ஷில்பா ஷெட்டி உங்க 10 கோடியும் வேண்டாம், அந்த மாத்திரையும் வேண்டாம் என மறுத்து விட்டாராம். உடல் எடை குறைப்பது என்பது மாத்திரை சம்பந்தப்பட்டது கிடையாது. அது மனம் மற்றும் உடல் நலம் சமபந்தபட்டது. முறையான உணவு மற்றும் உடற்பயிற்சி மட்டுமே உடல் எடை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு மற்றும் ஒரே தீர்வு. 

இந்த மருந்து மாத்திரைகள் எல்லாம் உடல் எடையை குறைத்து பின் விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்பு கொண்டவை. இந்த விளம்பரத்தில் நடித்து மக்களின் உடல் நலத்தோடு நான் விளையாட விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.