இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் தமிழில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் தெலுங்கு படங்களை இயக்குவதில் ஆர்வமாக இருக்கிறார். பாலகிருஷ்ணா நடிப்பில் இவர் இயக்கிய ஜெய்சிம்மா பெரிய வெற்றி பெற்றது.
அதனால் மீண்டும் இருவரும் இணைந்து பணியாற்றுகின்றனர்.இந்த படத்திற்கு முதலில் ஜெய்சிம்மா 2 என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. தற்போது ரூலர் என்ற மாற்றிவிட்டனர்.
இந்த படத்தின் பெரும்பகுதி கதை ஐரோப்பிய நாடுகளில் நடப்பதால் ஒரு மாதம் வரை அங்கு படப்பிடிப்பு நடக்கிறது. படத்தில் பாலகிருஷ்ணா இரண்டு வேடங்களில் நடிக்கிறார். 60 வயதாகும் பாலகிருஷ்ணா-விற்கு ஜோடியாக நடிக்க 30 வயது நடிகை வேதிகா-வை ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இவர்கள் தவிர பூமிகா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.
Tags
Actress Vedhika