350 கோடி பட்ஜெட்டில் உருவான "சாஹோ" படதிற்கு தமிழகத்தில் வந்த சோதனை..!


பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் கடைசியாக வந்த பாகுபலி2 தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ 150 கோடி வரை வசூல் செய்தது. இப்படத்தின் வெற்றியை இன்று வரை வேறு எந்த தமிழ் படமும் முறியடிக்கவில்லை. 


இந்நிலையில் பிரபாஸ் நடிப்பில் ரூ 350 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள சாஹோ படம் இந்த வாரம் உலகம் முழுவதும் வெளிவரவுள்ளது. இப்படத்தை பார்க்க பல லட்சம் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 


ஆனால், தமிழகத்தில் இப்படம் இன்னும் 10 காட்சிகள் கூட புக்கிங் ஆரம்பித்து புல் ஆகாமல் ஆமை வேகத்தில் நகர்ந்து வருகின்றது. அதே சமயம், ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் புக்கிங் ஆரம்பித்த சில நிமிடங்களில் ரிசர்வேஷன் தளங்கள் ஹேங் ஆகின. 

ஆனால், தமிழகத்தில் நிலை அப்படியல்ல, படத்தின் விமர்சனம் பாசிட்டிவாக வந்தால் மட்டுமே படம் ரிச் ஆகும் என்று கூறுகிறார்கள்.
Previous Post Next Post
--Advertisement--