விஞ்சூர் (நெல்லூர் மாவட்டம்): ஆந்திர மாநிலத்தின் அமைதியான ஒரு கிராமத்தில், காதல் எனும் பெயரில் நடந்த உறவுகள் கொடூரமான கொலையில் முடிந்திருக்கின்றன.
சம்பவம் நடந்தது விஞ்சூர் அருகே உள்ள விஞ்ஞரம்மா மலைப்பகுதியில். அங்கு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஒருவர், அடர்ந்த காட்டுப் பகுதியில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதை உணர்ந்தார்.

சந்தேகப்பட்ட அவர் அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தபோது, ஒரு புதருக்குள் அழுகிய நிலையில் ஒரு சடலம் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக ஊருக்குத் திரும்பி மக்களுக்குத் தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.
போலீஸ் விசாரணையில் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளியாயின. கொல்லப்பட்டவர் அதே ஊரைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பது தெரியவந்தது.
காதலில் இருந்து கொலை வரை...
40 வயதான வேங்கம்மா, கணவர் இறந்த பிறகு தனியாக வசித்து வந்தார். அவருக்கு மகன் ஹைதராபாத்தில் வேலை பார்க்கிறார். கணவனை இழந்து தனிமையில் இருந்த இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த ஸ்ரீகாந்துடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. இருவரும் கணவன்-மனைவி போல லிவ்-இன் உறவில் வாழ்ந்து வந்தனர். இந்த உறவு ஊர் முழுக்கவே தெரிந்திருந்தது. ஆனால், ஸ்ரீகாந்துடனான உறவு வேங்கம்மாவுக்கு புதிய உலகத்தை காட்டியது.
ஆனால், ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பது போல காலம் செல்லச் செல்ல விஷயங்கள் மாறத் தொடங்கின. ஸ்ரீகாந்த்துடன் ஆரம்பத்தில் பழகியது, உறவு கொண்டது எல்லாம் புதிய உணர்வை கொடுத்தது. ஆனால், ஊருக்குள் உள்ள எல்லோருக்கும் தெரிந்த பிறகு அந்த உறவின் சுவாரஸ்யம் குறைந்ததை அறிந்தாள் வேங்கம்மா.
இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஹரிபாபு மற்றும் பிரதீப் ஆகிய இருவருடனும் வேங்கம்மாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. வேங்கம்மா எப்போதும் தொப்புள் தெரியும் படி புடவை அணியக்கூடியவள். போதையில் இருந்த ஹரிபாபு வேங்கம்மாவின் அழகை வர்ணிக்கும் விதமாக பேச, அவளுக்கு மீண்டும் புதிய உலகம் தோன்றியது.
ஹரிபாபுவுடன் தனிமையில் இருக்க தொடங்கினாள். ஸ்ரீகாந்துக்கு தெரியாமல் உல்லாச வாழ்க்கை. ஆனால், இந்த விஷயம் ஸ்ரீகாந்துக்கு தெரியவந்தது. கோபமடைந்த ஸ்ரீகாந்த் வேங்கம்மாவை கண்டித்தார். ஆனால் வேங்கம்மா, “அவர்களுடன் வெறும் நட்புதான், தவறான உறவு இல்லை” என்று சமாதானப்படுத்தினார்.
ஸ்ரீகாந்த் நம்பவில்லை. அவர் வேங்கம்மாவை தரக்குறைவாகப் பேசியதுடன் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வேங்கம்மா, “ நீ என்ன என் புருஷனா..? நீயே எனக்கு கள்ளப்புருஷன் தான்.. இதுல அவன்கூட போகாத, இவன் கூட போகாதன்னு சட்டம் வேற போடுறியா..” என்று கடுமையாக தகாத வார்த்தைகளில் திட்டி வீட்டை விட்டு விரட்டியடித்தார்.
இதனால் மனமுடைந்த ஸ்ரீகாந்த் தினமும் மது அருந்தி வேங்கம்மாவிடம் தகராறு செய்யத் தொடங்கினார். இந்த நிலையில் வேங்கம்மா ஒரு கொடூர முடிவுக்கு வந்தார். ஸ்ரீகாந்தை ஒரேடியாகத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.
கொலைத் திட்டம்
வேங்கம்மா ஸ்ரீகாந்திடம் ஆளே இல்லாத காட்டுப்பகுதியில் உல்லாசமாக இருக்கலாமா..? என்று அன்பாக பேசினார். மது வாங்கிக்கொண்டு ஆளே இல்லாத விஞ்ஞரம்மா மலைப்பகுதிக்கு இருவரும் சென்றனர்.
அங்கே மது அருந்தி, இருவரும் உல்லாசமாக இருந்தனர். தலை நிக்காத போதையில் ஸ்ரீகாந்த் தள்ளாடும் வரை பொறுமை. உச்ச கட்ட போதையில் இருந்த போது விசிலடித்து சிக்னல் கொடுத்தால் வேங்கம்மா. இதை கேட்டு, அங்கு ஏற்கனவே காத்திருந்த ஹரிபாபு மற்றும் பிரதீப் ஆகிய இருவரும் வெளியே வந்து ஸ்ரீகாந்தைச் சுற்றி வளைத்தனர். ஆடையைகூட அணியமுடியாத அளவுக்கு போதையில் தள்ளாடினார் ஸ்ரீகாந்த்.
பின்னர் தாங்கள் கொண்டு வந்த கத்தியால் சரமாரியாகக் குத்தி அவரைக் கொன்றனர். சடலத்தை அருகிலிருந்த புதருக்குள் வீசிவிட்டு மூவரும் தப்பி ஓடினர். எதுவும் தெரியாதது போல தங்களது வாழ்க்கையை நகர்த்தினர்.
போலீசார் தீவிர விசாரணைக்குப் பிறகு வேங்கம்மா, ஹரிபாபு மற்றும் பிரதீப் ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ஒரு காலத்தில் அன்பு எனும் பெயரில் தொடங்கிய உறவு, பொறாமை, கோபம், பழிவாங்கும் உணர்வு என மாறி, இறுதியில் இரத்தக்களறியாக முடிந்திருப்பது இந்த சம்பவம். கிராம மக்கள் இந்தக் கொடூரச் சம்பவத்தால் அதிர்ச்சியில் உள்ளனர்.
Summary : In a village in Andhra Pradesh, a man found an unattended body in a forested hill area. Police identified it as Srikant, who shared a close relationship with Vengamma. She had friendships with two other local men. After some disagreements, Vengamma, Haribabu, and Pradeep were taken into custody for further inquiry.