திருமணம் ஆகி 40 நாளில் கல்லூரி திரும்பிய மருத்துவ மாணவி - விளைந்த விபரீதம் - கதறிய பெற்றோர்..~


திருமணம் ஆகி வெறும் 40 நாட்களே ஆன நிலையில் கல்லூரிக்கு திரும்பிய மருத்துவ மாணவி ஒருவர் தனது விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தென்னிவளவன். இவரது 22 வயதான மகள் கயல்விழி, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு எம்.எஸ் படித்து வந்தார். 

திருமணத்திற்கு பிறகு கல்லூரி திரும்பிய மாணவி மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார். இவருக்கு சமீபத்தில் தான் சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.எஸ் மருத்துவ படிப்பு பயின்று வரும் சக்தி கணேஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. 


சுமார் 40 நாட்கள் திருமண விடுப்புக்கு பின் அண்மையில் கல்லூரி திரும்பிய கயல்விழி, யாருடன் அதிகம் பேசாமல் மன இறுக்கத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது. 


இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று காலை தனியறையில் தங்கியிருந்த கயல்விழியை கல்லூரிக்கு அழைத்து செல்ல அவருடைய தோழிகள் வந்தபோது அறை பூட்டியிருந்துள்ளது. 

வெகு நேரம் கதவை தட்டியும் திறக்காததால், மாணவிகள் சந்தேகத்துடன் கதவை உடைத்து திறந்தபோது, கயல்விழி தூக்கில் பிணமாக தொங்கியபடி இருந்ததாக கூறப்படுகிறது. 

தகவல் அறிந்து வந்த கண்டோன்மென்ட் போலீசார், உடலை உடற்கூராய்வுக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, கயல்விழி உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். 

அதிர்ச்சியான பெற்றோர் திருச்சி வந்த அவரது பெற்றோர், கதறி அழுதனர். கயல்விழியின் உடலில் காயமிருப்பதாகவும், மகளின் மரணத்தில் ஏதோ மர்மம் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 

தற்கொலை என்றால் நிச்சயம் கடிதம் எழதி வைத்திருப்பார். ஆனால், சம்பவம் நடந்த இடத்தில் தற்கொலை கடிதம் எதுவும் சிக்கவில்லை. இதனை தொடர்ந்து, அதிகாரிகள் இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Previous Post Next Post
--Advertisement--