49 வயதிலும் இப்படியா..? - இளம் நடிகைகளுக்கு சவால் விடும் ஸ்லீவ்லெஸ் உடையில் நடிகை ரம்யா கிருஷ்ணன்..!


நடிப்பில் பல பரிமானங்களில் ஜொலித்து வரும் நடிகை ரம்யா கிருஷ்ணன் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்தில் சமீபத்தில் கோக்குமாக்கான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருக்கு இப்போது, 49 வயதாகின்றது.

இந்தப்படத்தில் ரம்யாகிருஷ்ணன் ஆபாசப்பட நடிகையாக நடித்திருந்தார். ஏற்கெனவே இந்தக் கதாபாத்திரத்தில் நதியா நடிப்பதாக இருந்தது. ஆனால் பாதி படப்பிடிப்பு முடிந்த நிலையில் சில காரணங்களால் அவர் இப்படத்தில் இருந்து விலகி விட்டார். 


அதனைத் தொடர்ந்து ரம்யாகிருஷ்ணன் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்தார். ’’ஆபாச நடிகை கேரக்டர் என்றாலும் எல்லை தாண்டாத கவர்ச்சியில் தான் ரம்யாகிருஷ்ணன் நடித்துள்ளார். அவருடைய கேரக்டருக்கு பின் ஒருவிதமான அழுத்தமும் சஸ்பென்ஸும் இருப்பதால் இந்த படத்தை பார்த்த பின்னர் அவர் ஏன் இந்த கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள்’’ என்று கூறியிருந்தார் படத்தின் இயக்குனர்.


படம் வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. மேலும், ரம்யா கிருஷ்ணன் கதாபாத்திரத்திற்கும் கலவையான விமர்சனங்களே வந்தன. இந்நிலையில், சமீபத்தில் நடை பெற்ற விருது விழா ஒன்றில் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் ஸ்லீவ்லெஸ் உடையில் தோன்றி ரசிகர்களை கவர்ந்தார். 

இதனை பார்த்த ரசிகர்கள் 49 வயதிலும் இப்படியா..? என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.



Previous Post Next Post
--Advertisement--