"மொதல்ல கொடுத்த 50 லட்சம் பணத்தை எடுத்து வை..!" - சமுத்திரகனிக்கு தயாரிப்பு நிறுவனம் பதிலடி


சமுத்திரகனியா அவரு நல்ல டைரக்டரு பா..! என்று தான் பலருக்கும் தெரியும். ஆனால், சமீபத்தில் வெளியான "கொளஞ்சி" படத்தில் இந்து மதத்தின் நம்பிக்கைகளை எதிர்க்கும் வண்ணம் பேசி தன்னுடைய அழிவு பாதையை தேடிக்கொண்டார். 

இவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக "களஞ்சி" என்ற ஒரு குறும்படத்தை வெளியிட்டு சமுத்திரகனிக்கு சாட்டையடி கொடுத்தனர் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள். நல்லா ஓடிக்ககொண்டிருக்கும் வண்டியில் அமர்ந்து கொண்டு வண்டியின் டயரில் ஆணியை குத்திக்கொண்டார் சமுத்திரகனி. 

இந்து மதம் மட்டுமல்ல, மற்ற எந்த மதமாக இருந்தாலும் அதனையும், அந்த மதம் சார்ந்த நம்பிக்கைகளையும் புண்படுத்தும் படி யாரும் பேசவே கூடாது. அதிலும், சினிமாவில் கூடவே கூடாது. அப்படி பேசிய நடிகர்கள், இயக்குனர் எல்லாம் இப்போது இருந்த இடம் தெரியாமல் போய்விட்டனர். 


இப்போது, சமுத்திரகனியும் அந்த பட்டியலில் சேர்ந்துள்ளார் என்றே சொல்ல வேண்டும். இன்னும் எத்தனை நாளைக்கு சமுத்திரகனி வண்டி ஓடும் என்று பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும். இந்நிலையில், சாட்டை படத்தின் அடுத்த பாகமான "அடுத்த சாட்டை" என்ற படத்தை இயக்கியுள்ளார் சமுத்திரகனி. 


இந்த படம் குறித்து சில சர்ச்சைகள் முளைத்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு "நேர்மை இல்லை" என்று ஒற்றை வார்த்தையில் ட்வீட் ஒன்றை பதிவு செய்திருந்தார். 

அதனை தொடர்ந்து, நேற்று "லிப்ரா புரொடக்ஷன்ஸ் திரு. ரவீந்திரன் சந்திரசேகரன் அவர்களுக்கும் "அடுத்த சாட்டை" திரைப்படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துக் கொள்கிறோம்.." என தொழில் சம்பந்தமான சண்டையை தெருவில் இழுத்து விட்டார். 

இந்நிலையில், அதற்கு பதிலளித்துள்ள லிப்ரா ப்ரொடக்ஷன் நிறுவனம் "நாங்கள் கொடுத்த 50லட்சம் ரூபாய் தவிர எங்களுக்கும் #அடுத்தசாட்டை திரைப்படத்திற்கும் இனி வேற எந்த தொடர்பும் இல்லை , அதை அவர்கள் நியாயப்படி திருப்பி தருவார்கள் என்ற நேர்மையை லிப்ரா புரொடக்சன்ஸ் எதிர்பார்க்கிறோம்@thondankani @prabhuthilaak @11_11cinema"என்று பதிலடி கொடுத்துள்ளது.

முன்னதாக, 50 லட்சம் பண விவகாரம் குறித்து எதையும் பதிவிடமால் வெறுமனே எந்த தொடர்பும் இல்லை என்று மட்டும் கூறிய சமுத்திரகனியை முதலில் 50 லட்சம் பணத்தை எடுத்துவை என்பதை மிகவும் கண்னியமான முறையில் எடுத்து கூறியுள்ளது லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ்.
Previous Post Next Post