சுதந்திர தின வாழ்த்து கூறிய இளம் நடிகையை கழுவி ஊத்திய ரசிகர்கள் - என்ன காரணம்..?


1947-ம் ஆண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயர்களால் ஆயுதங்களை இந்தியாவிற்குள் கொண்டுவர முடியாதபடி நான்கு புறமும் தனது படையை பரப்பி நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக திணறிய ஆங்கிலேயே அரசு தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாத காரணத்தினால் ஆகஸ்ட் 15 இந்திய மக்களின் அஹிம்சைக்கு கிடைத்த வெற்றி இது என கூறி இரவோடு இரவாக மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு நாட்டை காலி செய்து கொண்டு ஓடிய நாள். 

அதன் பிறகு, சுதந்திரத்திற்கு நாங்கள் தான் காரணம் என பேராண்மை படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி போல ஒரு சிலர் ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆக்கிரமித்தது வேறு கதை. அந்த ஒரு சிலர் யார் என்று நாங்கள் சொல்லி தெரிய வேண்டியதில்லை. இந்நிலையில், நேற்று இந்தியாவின் 73-வது சுதந்திர தினம் நாடு முழுதும் உள்ள இந்திய மக்களால் கொண்டாடப்பட்டது. 


இதனை தொடர்ந்து அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.


இந்நிலையில், பிரபல இளம் நடிகை ஈஷா குப்தாவும் வாழ்த்து தெரிவித்தார். ஆனால், சுதந்திர தினத்திற்கு பதில் குடியரசு தினம் என உள்ள புகைப்படத்தை பதிவிட்டுவிட்டார். 

இதை பார்த்த நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுக்க ஆரம்பித்துவிட்டனர். அதன்பிறகு, அதற்கு அம்மணி கொடுத்த பதில் தான் ஹைலைட்டே "என்னுடைய ட்விட்டேர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டது" எனவே யாரும் எதையும் பொருட்படுத்தாதீர்கள் என விளக்கம் கொடுத்துள்ளார் நடிகை. 

முன்பெல்லாம், கோக்குமக்கான புகைப்படத்தை வெளியிட்டு விட்டு சர்ச்சை கிளம்பியதும் ஹேக் செஞ்சுட்டாங்க என்று கதறும் நடிகைகள் இப்போது இப்படியான விஷயங்களுக்கும் ஹேக்கிங் என்ற வார்த்தயை பயன்படுத்த ஆரம்பித்து விட்டீர்களா..? என்று கழுவி ஊத்தி வருகிறார்கள்.