உடனே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேருங்கள் - சேரனுக்கு பிரபல இயக்குனர் வேண்டுகோள்.!


இயக்குனர் சேரன் பிக்பாஸ் வீட்டில் பலரின் பேவரட்டாக இருக்கின்றார். அதே நேரத்தில் சரவணன், சாண்டி, கவின் போன்ற போட்டியாளர்களுக்கு எதிரியாகவே இருந்து வருகின்றார்.


இந்நிலையில் சேரனை மிகவும் தரக்குறைவாக நேற்று சரவணன் பேசியது பலருக்கும் அதிர்ச்சி தான், பலரும் அதை கண்டித்தனர். அதே நேரம், சரவணனை வம்படியாக வம்புக்கு இழுக்கும் படி பேசி உசுப்பி விட்ட சேரன் மீதும் தவறு உள்ளது.


இந்நிலையில், வெயில், அங்காடிதெரு உள்ளிட்ட ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் வசந்தபாலன் கூட தன்னுடைய முகநூல் பக்கத்தில் மிகவும் கடுமையாக சில கருத்துக்களை கூறியுள்ளார். 


இதில் சேரன் சார் தயவு செய்து அந்த பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள் என்று கூறியுள்ளார். உங்கள் உயரம் பிக்பாஸ் அரங்கில் உள்ளவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, அந்த இடத்தை விட்டு உடனே வெளியேறுங்கள் என்று கூறியுள்ளார். 


இதனை பார்த்த ரசிகர்கள்., சும்மா இல்ல சாமி.. 50 லட்சம் ரூபாய் பேக்கேஜ் பேசிட்டு தான் உள்ளே போயிருக்காரு.சரவணன் செய்தது தவறு என்றால், அவரின்kகோபத்தை மென்மேலும் தூண்டும் விதமாக பேசிய சேரன் மீதும் தவறு உள்ளது. 

மேலும்,20vவருடங்களுக்கு முன்பு சரவணனின் நிலை கண்டு மிகவும் ஏளனமாக பேசிவிட்டு சென்றுள்ளார் சேரன். ஒரு மனிதன் தனக்கு நேர்ந்த அவமானத்தை எப்போதும் மறக்க மாட்டான். அந்த வகையில், சரவணன் செய்தது தவறே இல்லை என்று ஒரு தரப்பு ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.


Previous Post Next Post
--Advertisement--