கல்லூரி ஆண்டு விழாவில் லாஸ்லியாவின் நடனம் - எவ்வளவு ஒல்லியாக இருக்காரு பாருங்க..! - வைரல் வீடியோ


பிக்பாஸ்  லாஸ்லியா இலங்கையின் கிளிநொச்சியில் ஒரு கிறித்தவக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தாயும், தந்தையும் இலங்கையின் யாழ்பாணத்தைச் சேர்ந்தவர்கள். 


பின்னர் அவர்கள் திருக்கோணமலைக்கு இடம்பெயர்ந்தனர். இவர் தன் கல்வியை திருக்கோணமலையில் தொடர்ந்தார். இவர் நான்கு ஆண்டுகளாக கொழும்புவில் வசித்துவந்த நிலையில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்தார். 

பின்னர், ஊடகத்துறையின் மீது ஈர்ப்பு காரணமாக  தன் பணியில் இருந்து விலகி ஊடகத்தில் செய்தி வாசிப்பாளராக இணைந்தார். தற்போது இவர் இலங்கையின் ஒரு முதன்மை செய்தி வாசிப்பாளராக உள்ளார். 


இந்த நிலையில்,தமிழ் பிக்பாஸ் சீசன் 3 வாய்ப்பு கிடைக்கவே அதனை ஏற்றுக்கொண்டு போட்டியாளராக கலந்து கொண்டார். பிக்பாஸ் ரசிகர்களுக்கு இவர் மீது ஆதாரவான கருத்து கூறுபவர்களும் உள்ளனர். எதிர்மறையான கருத்துகளை கூறும் ரசிகர்களும் உள்ளனர். 


அது அவரவர் தனிப்பட்ட விருப்பம் மற்றும் நிகழ்ச்சியை அவர்கள் எவ்வாறு நோக்குகிறார்கள் என்பதை பொருத்தது. பொதுவாக பார்த்தால், லாஸ்லியா-விற்கு ரசிகர்கள் வட்டம் மற்ற போட்டியாளர்களை விட சற்று அதிகம் என்றே கூறலாம். 

இந்நிலையில் லொஸ்லியா படித்த கல்லூரியின் ஆண்டுவிழாவில் பாடல் ஒன்றிற்கு அவர் நடனம் ஆடும் வீடியோ ஒன்று இணையத்தளத்தை கலக்கி வருகிறது.

இதோ அந்த வீடியோ,.
Previous Post Next Post
--Advertisement--