வித்தியாசமான முறையில் வெளியேற்றப்பட்ட ரேஷ்மா - ரசிகர்கள் ஷாக்..!


பிக்பாஸ் சீசன் 3-யில் இன்று நடிகை ரேஷ்மா எவிக்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த வாரம் நடிகை சாக்‌ஷி அல்லது கவீன் ஆகிய இருவரில் ஒருவர் தான் இந்த வாரம் வெளியேறுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். 

ஆனால், யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் ரேஷ்மா எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். அதுவும் வித்தியாசமான முறையில் இந்த எலிமினேட் நடந்தது. 


எப்படியென்றால், இந்த வாரம் எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ள சாக்‌ஷி, கவீன், அபிராமி மற்றும் ரேஷ்மாவின் கைகள் விலங்கால் கட்டப்பட்டது. 


அப்போது, தொகுப்பாளர் கமல்ஹாசன் அவர்களிடம் பிக்பாஸ் வீட்டில் இதற்கான சாவி ஒளித்து வைக்கப்படிருக்கிறது. அதனை கண்டு பிடித்து எடுத்து வந்து விலங்கை அவிழ்த்து விடுமாறு கூறினார். 

அதில், நடிகை ரேஷ்மா தான் இந்த வாரம் வெளியேறுபவர் என தெரிய வருகின்றது. ஆனால், நடிகை சாக்‌ஷி நான் வெளியில் போகிறேன் என்று கமலிடம் கூறுகிறார். இறுதியாக நடிகை ரேஷ்மா வெளியேறுவதை கண்டு அவரை இந்த வாரம் நாமினேட் செய்த முகென் மனமுடைந்து நின்றார்.

கடந்த ஐந்து வாரங்களாக நாமிநேஷனாக ஆகாமல் இருந்த ரேஷ்மா.நாமினேட் ஆன முதல் வாரமே வெளியேறியுள்ளது ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.
Previous Post Next Post