மணிரத்தினம் இயக்கிய காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரீ ஆனவர் அதிதி ராவ். தனது முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை வென்று அனைவரின் கவனத்தை ஈர்த்த இவர் அந்த வெற்றியை தொடர்ந்து மீண்டும் மணிரத்தினம் இயக்கத்தில் செக்கச்சிவந்த வானம் படத்தில் நடித்தார்.
இந்த இரண்டு படங்களையும் தொடர்ந்து தற்போது மீண்டும் மூன்றாவது முறையாகவும் மணிரத்தினம் இயக்கத்தில் "நவாப்" என்ற படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்தது.
மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் படு பிசியாக நடித்து வரும் அதிதிக்கு தற்போது 32 வயதாகிறது. சமீபத்தில், ஒரு பேட்டியில் பேசிய அவர், பாலிவுட் படமான Yeh Saali Zindagi-யில் ஹீரோ Arunoday Singh-உடன் படுகையறை காட்சியில் நடிக்க சொன்னார்கள்.
என்னிடம் கதை சொல்லும் போது இப்படி ஒரு காட்சியை அவர்கள் சொல்ல வில்லை. ஆனால், படத்திற்கு மிக முக்கியமான தேவையாக அந்த காட்சி இருப்பதை உணர்ந்தேன். ஹீரோ Arunoday Singh பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. அது தான் அவருடன் முதல் படம்.
எப்படி, இவருடன் படுக்கையறை காட்சியில் நடிப்பது என தயங்கினேன். ஆனால், அந்த காட்சியில் நடிக்கும் போது அவர் என்னிடம் மிகவும் கண்ணியமாக நடந்து கொண்டார். ஒரே டேக்கில் அந்த காட்சிகளை படமாக்கி முடித்தோம்.
எனது பயத்தை போக்கியது அவருடைய நேர்மையான மற்றும் கண்ணியமான நடத்தை தான் என்று விளக்கம் கொடுத்தார் நடிகை அதிதிராவ.
இந்நிலையில், மணிரத்தினத்தின் காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் ஆகிய படங்களை தொடர்ந்து அடுத்த படமான பொன்னியின் செல்வன் என்ற பிரமாண்ட படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் அம்மணி.
Tags
Aditi Rao Hydari