தமிழில் ஆடுகளம் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை டாப்சி. தொடர்ந்து, இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட ஹீரோக்களுடன் சில படங்களில் நடித்தார்.
ஆனால், அடுத்தடுத்து தமிழில் வாய்ப்பில்லாமல் தவித்தார். இதனால், தெலுங்கு, ஹிந்தி பக்கம் தலையை திருப்பினர். பாலிவுட்டில் அம்மணிக்கு சிவப்பு கம்பள வரவேற்ப்பு அளித்துள்ளார்கள்.
இவர் நடிப்பில் உருவாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றன. இயற்கையாகவே ஒல்லியான, ஃபிட்டான தோற்றமுடைய டாப்ஸி அடிக்கடி கவர்ச்சி போட்டோஷூட்களை நடந்துவது வழக்கம்.



