குழந்தை நட்சத்திரமாக வாழ்க்கையைத் துவக்கிய அவர், இன்று நல்ல குடும்பத்தலைவியாகவும், நடிகையாகவும், சிறந்த அரசியல்வாதியாகவும், வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் திகழ்கிறார்.
தற்போது பிரபல தொலைக்காட்சியில் லட்சுமி ஸ்டோர் எனும் மெகா தொடரில் நடித்து வருகிறார்.கொண்டையில் தாழம்பூ... கூடையில் வாழைப் பூ.... நெஞ்சிலே என்ன பூ... குஷ்பூ... என் குஷ்பூ.. என இளைஞர்களை வெகுநாட்களாக பாட வைத்த பெருமைக்குரியவர் நடிகை குஷ்பு.
கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் நடுவராகவும் பணியாற்றி வருகிறார்.
தன் கணவர் சுந்தர். சி கதாநாயகனாக நடிக்கும் படங்களை “அவ்னி சினிமாக்ஸ்” என்ற படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.இன்றளவும் இவருக்கு ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
சமீபத்தில், தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட குஷ்புவின் அங்கத்தை கூட்ட நெரிசலை பயன்படுத்தி தகாத முறையில் சீண்டிய வாலிபர் ஒருவரை அங்கேயே பளார் விட்டார் நடிகை குஷ்பு.
இந்நிலையில், குஷ்புவின் இளவயது புகைப்படம் என்று ஒரு புகைப்படம் இணையத்தில் பரவி வருகின்றது. இது நிஜமாகவே குஷ்பு தானே என்று ரசிகர்களே ஷாக் ஆகி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்,