முதன் முறையாக லிப்-லாக் முத்த காட்சியில் நடிகை கீர்த்தி சுரேஷ்..! - ஹீரோ யாரு தெரியுமா..?


தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். 2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013 ஆவது ஆண்டில் கீதாஞ்சலி என்னும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். 

சமீபத்தில் இவர் நடித்து வெளியான நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தமிழ், மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றதால், தற்போது கீர்த்தி சுரேஷ்க்கு நிறைய பட வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. 


இதுகுறித்து கீர்த்தி கூறுகையில், தன்னை தேடி நல்ல கதைகள் வருவதற்கு அதிர்ஷ்டம் இருக்க வேண்டும். அதிர்ஷ்டம் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதே நேரத்தில் திறமையும் முக்கியம். சாவித்திரி வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த பிறகு அழுத்தமான கதைகளில் நடிக்க வாய்புகள் வருகிறது. 


இதனால் கதைகளை தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறேன். கதைகள் கேட்கும்போது இதில் நடிக்கலாம் என்று மனது சொன்னால் அதை ஏற்கிறேன். ஆனால் முத்த காட்சியில் நடிக்க விருப்பம் இல்லை. 

கோடி பணம் கொடுத்தாலும் அதுபோன்ற காட்சியில் நடிக்க கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும். முத்த காட்சியில் நடிக்க மாட்டேன் என்றதால் சில நல்ல படங்களில் நடிக்கும் வாய்புகள் கைநழுவி சென்றதாகவும் கூறி வந்தார். இப்போது, பாலிவுட்டிலும் காலடி வைத்துள்ள கீர்த்தி சுரேஷ் அதற்காக உடல் எடையை கூட குறைத்துள்ளார். 

இந்நிலையில், இப்போது கமிட்டாகியுள்ள நடிகர் அஜய் தேவ் கான் ஹீரோவாக நடிக்கவுள்ள ஹிந்தி படத்தில் லிப்-லாக் முத்த காட்சியில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் இணையத்தில் பரவி வருகின்றது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இது குறித்து கீர்த்தி சுரேஷ் வாயை திறந்தால் தான் உண்டு. 
Previous Post Next Post
--Advertisement--