'பிரேமம்' படத்தின் மூலமாகத் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகை மடோனா செபாஸ்டியன். விஜய் சேதுபதி ஜோடியாக ‘காதலும் கடந்து போகும்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து, ‘கவண்’ படத்திலும் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்தார்.பின்னர் தனுஷ் இயக்கிய நடித்த பவர் பாண்டி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த மடோனாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
தொடர்ந்து, ‘ஜுங்கா’ படத்தின் மூலம் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதிக்கு ஜோடியானார் மடோனா செபாஸ்டியன்.தற்போது இவர் மணிரத்னத்தின் உதவி இயக்குநர் தனா எடுத்துக்கொண்டிருக்கும் 'வானம் கொட்டட்டும்' என்ற படத்திலும் கொம்பு வச்ச சிங்கம் என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
மேலும் மளையாலத்தில் 'பிரதர்ஸ் டே' மற்றும் கன்னடத்தில் 'கொடிகொப்பா 3' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.இதனை தொடர்ந்து, தெலுங்கிலும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் அம்மணி. இந்த படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சி காட்டி நடிக்கவுள்ளாராம்.