நடிகர் அஜித்திற்கு உலகம் முழுதும் ரசிகர்கள் வட்டம் விரிந்து கிடக்கிறது. இவரது படங்களுக்கு இருக்கும் வரவேற்பு சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை படம் தான் அதற்கு சாட்சி. இந்த படம் ஒரு ரீமேக் படம் என்றும் அதுவும் எந்த படத்தின் ரீமேக் என்றும் கூறிவிட்டுதத்தான் படத்தையே ஆரம்பித்தார்கள்.
ரீமேக் படங்களுக்கு என்ன மவுசு வந்துவிட போகிறது என்று தான் பலரும் நினைத்தார்கள். ஆனால், நேர்கொண்ட பார்வை அவற்றை தவிடு பொடியாக்கி 160 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து இன்னமும் ஓடிக்கொண்டிருகின்றது.
முன்னதாக, இதே வருடம் ஜனவரி மாதம் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படமும் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்து வசூலில் சக்கை போடு போட்டது. இத்தனைக்கு, விஸ்வாசம் படத்துடன் சூப்பர் ஸ்டாரின் "பேட்ட" படமும் ரிலீஸ் ஆனது.
இந்நிலையில், நடிகர் விஜய்யின் அப்பாவும் பிரபல இயக்குனருமான எஸ்.எ.சந்திரசேகர் "விஸ்வாசம் படத்தை பார்த்து விட்டு என்னால் சோகத்தை அடக்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதுவிட்டேன். படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் என்னுடைய மகளை இழந்து விட்டதை எண்ணி மிகவும் நொந்து போனேன். அதனால் என்னுடைய கண்ணீரை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை" என்று கூறியுள்ளார்.