நயன்தாராவின் இயற்பெயர் டயானா மரியம் குரியன். கேரளாவின் சிறியன் கத்தோலிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். சினிமாவில் பிரபலமாக அவருக்கு ஒரு இயக்குனர் வைத்த பெயர் தான் "நயன்தாரா".
நயன்தாரா முதன் முதலில் மலையாளத்தில் அறிமுகமான திரைப்படம் 'மனசினக்கரே' அந்த படத்தின் படத்தின் இயக்குனர் சத்யன் அந்திக்காடு என்பவர் டயானா மரியம் குரியன் பெயரை மாற்றுவது குறித்து படக்குழுவினரிடம் கலந்து விவாதித்து வந்தார்.
இறுதியாக, நயன்தாரா என்ற பெயர் தேர்வு செய்யப்பட்டு படப்பிடிப்பில் இருந்த நடிகை ஷீலா மூலம் நயன்தாராவிற்கு அந்த பெயரை சூட்டினார். தாரா என்றால் நட்சத்திரம் என்று பொருள். நயன் என்றால் நயனம். நயனம் என்றால் நளினமான என்று பொருள். சினிமாவில் அவர் பிரபல நட்சத்திரமாக வலம் வரவேண்டும் என நினைத்து நயன்தாரா என்கிற பெயரை சூட்டினாராம் ஷீலா.
மலையாளத்தில் அறிமுகமாகி, தமிழில் கால் பதித்து, தெலுங்கில் வெற்றிக்கொடியை பறக்கவிட்ட போதும் நயன்தாரா ஒரு சிறியன் கிறிஸ்தவராகத்தான் இருந்தார். இந்துவான சிம்புவை காதலித்த போதும் மதம் மாறவில்லை அவர்.
பிரபுதேவாவை அவர் காதலிக்க ஆரம்பித்ததும் நிலைமை மாறியது. படப்பிடிப்புக்காக செல்கிற ஊர்களில் பிரபலமான வழிபாட்டுத்தலங்கள் இருந்தால் தவறாமல் அங்கு செல்வது நயன்தாராவின் வழக்கம். அது இந்து கோவில்களாகயிருந்தாலும். பிரபுதேவாவை காதலிக்க ஆரம்பித்ததும், இந்தப் பழக்கம் வழக்கமாக மாறியது.
தொடர்ச்சியாக இந்து கோவில்களுக்குப் போக ஆரம்பித்தார். பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ளும் முடிவுடன் சினிமாவுக்கு முழுக்குப்போட நயன்தாரா தீர்மானித்த பின் கடைசியாக ஒப்புக் கொண்ட படம், ஸ்ரீ ராம ராஜ்ஜியம். பாலகிருஷ்ணா நடித்த தெலுங்குப் படமான இதில் சீதையாக நயன்தாரா நடித்தார்.
படப்பிடிப்பு நடந்த நாள்களில் அசைவம் எடுக்காமல் முழு இந்துவாக படத்தில் ஈடுபாடுகாட்டினார். உச்சமாக நயன்தாரா என்று தனது பெயரை அதிகாரப்பூர்வமாக மாற்றியதுடன், இந்து மதத்துக்கு மாறினார்.இதற்கு சில கிருத்துவ அமைப்புகள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தன. ஆனால், நயன்தாரா அவற்றை கண்டு கொள்ளவில்லை.
இந்நிலையில், இந்த வருடம் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ள நயன்தாரா சினிமாவுக்கு குட்பை சொல்லவுள்ளார் என்ற தகவல் தீயாக பரவி வருகின்றது. மேலும், தன்னுடைய "நயன்தாரா" என்ற பெயரை மீண்டும் "டயானா மரியம் குரியன்" என்று மாற்றிக்கொள்ளவும் திட்ட மிட்டுள்ளார் உறுதிபடுத்தப்படாத தகவல்களும் இணையத்தில் வலம் வந்து கொண்டிருகின்றன.
இந்நிலையில், இந்த வருடம் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ள நயன்தாரா சினிமாவுக்கு குட்பை சொல்லவுள்ளார் என்ற தகவல் தீயாக பரவி வருகின்றது. மேலும், தன்னுடைய "நயன்தாரா" என்ற பெயரை மீண்டும் "டயானா மரியம் குரியன்" என்று மாற்றிக்கொள்ளவும் திட்ட மிட்டுள்ளார் உறுதிபடுத்தப்படாத தகவல்களும் இணையத்தில் வலம் வந்து கொண்டிருகின்றன.
Tags
Nayanthara