பிக்பாஸ் அனைத்து சீசன்களிலும் ஸ்மோகிங் ஏரியா என போட்டியாளர்கள் புகைப்பிடிப்பதற்காகவே தனியாக ஒரு அறை இருக்கும் என நம் அனைவருக்கும் தெரியும்.
அந்த அறையில் கேமரா இருந்தாலும் அங்கு புகைப்பிடிக்கும் காட்சியை நிகழ்ச்சியில் காட்ட மாட்டார்கள்.
இந்த நிகழ்ச்சி ஆரம்பத்திலேயே குழந்தைகள் எல்லாம் நிகழ்ச்சி பார்ப்பார்கள் எங்களுக்கும் சமூக அக்கறை உள்ளது, அந்த அறை நிகழ்வை மட்டும் காட்ட மாட்டோம் என கமல்ஹாசன் கூறியுள்ளார். ஆனால், பிற மொழி பிக்பாஸ்-ல் புகைப்பிடிக்கும் காட்சிகளை ஒளிபரப்பு செய்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்றைய பிக்பாஸ் எபிசோடில் நடிகை அபிராமி ஸ்மோகிங் அறையில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தார். அவரை சமாதானப்படுத்த அவரது நண்பரான முகென் ராவ் அங்கு சென்றார்.
அப்போது அந்த காட்சியில் ஸ்மோகிங் அறையை தெளிவாக காட்டியுள்ளனர். அதில் ஒரு ஓரத்தில் ஒரு தீப்பெட்டியும் மேலும், விதவிதமான சிகிரெட் பாக்கெட்டுகள். மற்றும் ஹேஸ்ட்ரே ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.