இதெல்லாம் ஒரு பொழப்பா..? - சாஹோ படக்குழுவை விளாசிய பிரபல நடிகை..!


பிரபாஸ் நடிப்பில் "சாஹோ" திரைப்படம் தமிழ்,மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என்று 5 மொழிகளில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 

அதிரடி ஆக்சன் நிறைந்திருக்கும் படத்தின் டீசர் வெளிவந்த போது ஹாலிவுட் தரத்தில் உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்திருந்தனர். 

பிரபாசிற்கு ஜோடியா ஜோடியாக பிரபல இந்தி நடிகை ஸ்ரத்தாக கபூர் நடித்துள்ளார். இந்நிலையில் இன்று வெளியான இந்த படம் குறித்து ட்விட்டரில் பலரும் கலவையான விமர்சனங்களை பதிவிட்டுள்ளனர். 


படம் முடியும் முன்பே எழுந்து ஓடிவந்த ரசிகர்கள் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 3 கோடி ரூபாய் கூட செலவு இல்லாத கதைக்கு எதற்கு 350 கோடி பட்ஜெட் என வறுத்தெடுத்து வருகிறார்கள் ரசிகர்கள். 


இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, படக்குழு மீது மற்றொரு குற்றசாட்டு எழுந்துள்ளது. அது என்ன என்று பார்த்தால், சாஹோ படத்தின் போஸ்டர் தான். பிரபல நடிகை லிசா ராணி ராய் என்பவர் தான் இந்த குற்றசாட்டை வைத்துள்ளவர். 

ஆர்ட் என்றால் என்ன..? அது எங்கிருந்து வருகின்றது என்று தெரியுமா..? uஉண்மையான ஆர்ட்கலைஞர்களை மதிக்காமல் தொழில் நோக்கில் நீங்கள் செய்யும் இது போன்ற காப்பி பேஸ்ட் வேலையெல்லாம் ஒரு ஆர்ட்டா..? நீங்கள் அப்படி நினைகிறீர்களா..? ஆர்ட் என்பது ஒருவரின் எண்ணம்.. ஒருவரின் கற்பனை.. ஆனால், நீங்கள் அதனை எளிமையாக காப்பி பேஸ்ட் செய்து விட்டு போகிறீர்கள். இதெல்லாம் ஒரு பிழைப்பு என்று நீங்கள் கருதுகிறீர்களா..? என்று விளாசியுள்ளார். 

இதோ அந்த புகைப்படம்,

Previous Post Next Post
--Advertisement--